Published:Updated:

`கொடி, ஜெர்ஸியைப் பயன்படுத்தக் கூடாது!’ - அங்கீகாரம் இல்லாத அணியால் கொதிக்கும் இந்தியக் கபடிக் கழகம்

பாகிஸ்தானில் கபடி உலகக் கோப்பை என்ற பெயரில் நடைபெறும் தொடரில் அனுமதியின்றிக் கலந்துகொண்டுள்ளவர்கள், இந்திய தேசியக் கொடியைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அமெச்சூர் கபடிக் கழகம் வலியுறுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாகிஸ்தானில் லாகூரில் கபடி உலகக் கோப்பை என்ற பெயரில் சர்க்கிள் கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிக்கு சர்வதேச கபடிக் கழகம் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று அதன் தலைவர் ஜனார்த்தன சிங் கெஹ்லாட் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்தநிலையில், இந்திய தேசியக் கொடியுடன் லாகூரில் வந்திறங்கிய வீரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

பாகிஸ்தான் கபடி தொடர்
பாகிஸ்தான் கபடி தொடர்

இந்தத் தொடரில் இந்தியக் கொடியுடன், தங்களை இந்திய அணி என்று கூறிக்கொண்டும் வீரர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், பாகிஸ்தானில் அப்படி ஒரு தொடர் நடத்தப்படுவதே எங்களுக்குத் தெரியாது என்கிறது இந்திய அமெச்சூர் கபடிக் கழகம். மேலும், அந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அதற்காக இந்தியா சார்பில் எந்த அணியையும் அனுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

டுப்கி கிங், சுல்தான், சூப்பர் சுமித், சூறாவளி பவன்… 2019 ப்ரோ கபடி சூப்பர் ஸ்டார்ஸ்! #ProKabaddi

இந்தநிலையில், அந்தத் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் இன்று நடக்கிறது. இதில், இந்திய தேசியக் கொடியையும் இந்தியா என்ற பெயர் தாங்கிய ஜெர்ஸியையும் அந்த வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இந்திய அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் பாகிஸ்தான் கபடிக் கழகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தான் செல்ல அவர்களுக்கு அனுமதியளித்தது யார் என்றே தெரியாது என்று கூறியுள்ள இந்தியக் கபடிக் கழகம், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு