Published:Updated:

`40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

திருமாவளவன்

மனு தர்மத்தைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் போராட்டம் அறிவித்தார். இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

மனு தர்மத்தைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் போராட்டம் அறிவித்தார். இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
திருமாவளவன்

சென்னையில் யூ-டியூப் சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்மம் குறித்துப் பேசினார். அதில் அவர் பெண்கள் குறித்துப் பேசியது விவாதமானது. பெண்கள் குறித்து அவர் பேசிய வீடியோ காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் பரவின.

இந்தநிலையில், நேற்று சென்னையில் பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, `பெண்கள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, அவரின் கூட்டணிக் கட்சியான தி.மு.க ஏன் பதில் சொல்லவில்லை... காங்கிரஸ் ஏன் பதில் சொல்லவில்லை... பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா... பெண்களிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர்கள் ஓட்டுப் போடுவார்களா... இந்த விவகாரத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை... ஏன் கண்டனத்தைக்கூட பதிவு செய்ய வில்லை...” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

குஷ்பு
குஷ்பு

``மனு தர்மத்தில் பெண்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததைத்தானே திருமாவளவன் சுட்டிக்காட்டினார்’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ``அதில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை. ஒரு கட்சித் தலைவர் அதைப் புரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும்’’ என்றார் குஷ்பு.

இந்தநிலையில் சமூக வலைதளத்தில், திருமாவளவன் பெண்கள் தொடர்பாக இழிவாகப் பேசியதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில், திருமாவளவன் மீது சென்னை குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறர்கள். திருமாவளவன் மீது வழக்கு பதியப்பட்டதற்கு தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது காவல்துறை பதிந்திருக்கும் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீது வழக்கு பதிந்தது கண்டிக்கத்தக்கது. விழிப்புணர்வுக்காக பெரியார், அம்பேத்கர் கூறியதை எடுத்துக் கூறி வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிரார். திருமாவளவன் பேசியதைத் திரித்து, சமூக வலைதளங்களில் பரப்பி, வன்முறையைத் தூண்ட மதவெறியர்கள் முயல்கின்றனர். தி.மு.க கூட்டணியில் கலகம் விளைவிக்க வாய்பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது’’ எனத் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இன்று இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ``பெண்மையைப் போற்ற வேண்டுமே தவிர தூற்றக் கூடாது. பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது கண்டனத்துக்குரியது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்துவருகிறது. திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் மனு தர்மத்தைத் தடைசெய்யக்கோரி திருமாவளவன் போராட்டம் அறிவித்தார். இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ``மகளிரையும் மனிதகுலத்தையும் இழிவுபடுத்தி உரைக்கும் மனுதர்ம நூலைத் தடை செய்ய வேண்டும்” என்றார்.

`40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

தொடர்ந்து பேசியவர், ``பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் நான் பேசியதை, துண்டித்து வெளியிட்டிருக்கிறார்கள். எனது 40 நிமிட உரையை முழுமையாகப் பெண்கள் கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்துக்காகப் பழி போடுகிறார்கள். தி.மு.க கூட்டணியைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோல அவதூறு பரப்புகிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism