Published:Updated:

தடுப்பூசி போட்ட 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! - சர்ச்சையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை

லித்தேஷ்
லித்தேஷ்

பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தை, `தடுப்பூசி போட்டதால்தான் இறந்துவிட்டது’ என்று கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விளை கிராமத்தைச் சேர்ந்தவர், சிரஞ்சீவி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களின் 5 மாத குழந்தை லித்தேஷுக்கு, நெசல் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதல்கட்ட தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று அதிகாலை, லித்தேஷ் மூச்சுப் பேச்சின்றி இருந்துள்ளான். பயந்துபோன சிரஞ்சீவி, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

இதனால் மனமுடைந்த சிரஞ்சீவி-தமிழரசி தம்பதியினர், நடந்த விவரத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நெசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, தடுப்பூசி போட்ட செவிலியர் செந்தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆறு மாதங்களில் 1,000 குழந்தைகளுக்கு மேல் உயிரிழப்பு! சர்ச்சையில் ராஜஸ்தான் அரசு மருத்துவமனை
தடுப்பூசி போட்ட 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! - சர்ச்சையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை

தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய போலீஸார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமரசம் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர். குழந்தை லித்தேஷ் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

பின் செல்ல