Published:Updated:

`இந்த டி-சர்ட்டோட தெருவுக்குள்ள வருவியா?’- சாதி வன்மத்துடன் இளைஞரைத் தாக்கிய போலீஸ்; தி.மலை சர்ச்சை

கேபிள் டிவி ஒயரால்தாக்கும் போலீஸ்
கேபிள் டிவி ஒயரால்தாக்கும் போலீஸ்

`தன்னுடைய பெரியப்பா வீட்டிற்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவரை, சாதி வெறியோடு நடு ரோட்டில் முட்டிப்போட வைத்து விடுமுறையிலிருந்த போலீஸ் ஒருவர் கேபிள் டிவி ஒயரால் தாக்கியிருக்கிறார்'

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கெளதமபிரியன் (20) என்ற இளைஞர். இவர், கடந்த 31-ம் தேதி அன்று பக்கத்து ஊரான கிளையூர் கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு, தன் தங்கையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டுவிட்டுத் திரும்பி வந்துள்ளார். வரும் வழியில், குப்பநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே தன் தங்கையின் தோழி ஒருவர் நடந்து வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணிடம் நலம் விசாரித்துள்ளார் கெளதமபிரியன்.

`இந்த டி-சர்ட்டோட தெருவுக்குள்ள வருவியா?’- சாதி வன்மத்துடன் இளைஞரைத் தாக்கிய போலீஸ்; தி.மலை சர்ச்சை

அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர் ஈஸ்வரன் கெளதமபிரியனிடம், `யார் நீ. எதற்கு ஊர் தெருக்குள்ள வந்த... இந்த டி-சர்ட் போட்டுகிட்டு ஊர் தெருக்குள்ள வருவியா. அந்த அளவிற்கு உனக்கு தைரியம் வந்துடுச்சாடா? அந்தப் பெண்ணிடம் உனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு’ என்று கேட்டு, கெளதமபிரியனை நாடுரோட்டில் முட்டிபோட வைத்திருக்கிறார். மேலும், கேபிள் டிவி ஒயரால் கடுமையாகவும் தாக்கியுள்ளார். அதோடு, அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட்டைக் கிழித்து எறிந்துவிட்டு, அங்கிருந்து கெளதமபிரியனைத் துரத்தி அடித்துள்ளார். விடுமுறையிலிருந்த காவலர் ஈஸ்வரன்.

இதுகுறித்து குப்பநத்தம் பகுதி மக்களிடம் விசாரித்தோம், ``ஈஸ்வரன் செங்கம் அடுத்த புதுப்பாளையம் காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று ஈஸ்வரன் விடுமுறையில் இருந்தார். கெளதமபிரியனை அடிக்கும்போது அவர் குடிபோதையில் இருந்தது போன்று தெரிந்தது.

இளைஞரைத் தாக்கும் போலீஸ்
இளைஞரைத் தாக்கும் போலீஸ்

`அந்தத் தம்பியை அடிக்காதீங்க சார்’ என்று பல முறை சொல்லியும், அவர் அந்த இளைஞரின் சாதி பெயரைச் சொல்லி அடித்தார். அதன் பின்பு அங்கிருந்தவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொல்லவே அந்த இளைஞரைத் துரத்திவிட்டார். அவர் அடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் போட்டுவிட்டனர், சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர்கள். ஈஸ்வரன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு” என்றனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவவே, எதிர்ப்புகள் கிளம்பவே வேற வழியின்றி கடந்த 4-ம் தேதி அன்று, ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது செங்கம் காவல்துறை.

FIR
FIR

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவலர்களும் தூக்கமில்லாமல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், விடுமுறையில் இருந்த போலீஸ் ஒருவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு