Published:Updated:

`சொந்தக் கட்சியிலும் விருதுக்கு ஆள் இல்லையா?!' -பெரியார் விருதை அறிவிக்கவைத்த ஸ்டாலின் ட்வீட்

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சமூக நீதிக்கான பெரியார் விருது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான கபிலர் விருது, புலவர் வெற்றி அழகனுக்கும் உ.வே.சா. விருது, வெ.மகாதேவனுக்கும் கம்பர் விருது, முனைவர் சரஸ்வதி ராமநாதனுக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், அம்மா இலக்கிய விருது, உமையாள் முத்துவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பில் சமூக நீதிக்கான பெரியார் விருது குறித்து எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது சர்ச்சையானது.

ஸ்டாலின் கண்டனம்
ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஸ்டாலின், `தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்த ஆண்டு விருதுப்பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.

Vikatan

கடந்த ஆண்டுக்கு முன், தங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு வழங்கினார்கள். இந்த ஆண்டு, சொந்தக் கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா, அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனதைக் குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா? காரணம் என்ன என்பதை தமிழக மக்களுக்கு அ.தி.மு.க அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

ஓ.பி.எஸ் உடன் செஞ்சி ராமச்சந்திரன்
ஓ.பி.எஸ் உடன் செஞ்சி ராமச்சந்திரன்

ஸ்டாலினின் பதிவுக்குப் பின் பெரியார் விருது, தமிழக அரசு சார்பில் முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டுக்கான பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vikatan