உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள ஒரு அரசு சிறுவர் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் உ.பி மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது, அந்தக் காப்பகம் சீல் வைக்கப்பட்டு, அதில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 7 சிறுமிகளில் 3 பேர் ராமா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையிலும் இரண்டு பேர் ஹாலெட் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த 5 சிறுமிகளும் போக்ஸோ சட்டத்தின்கீழ், குழந்தைகள் நல வாரியத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து காப்பாற்றப்பட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சில நாள்களாகவே அந்த அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதனால் மாவட்ட அதிகாரிகள் சுகாதாரத்துறைக்குத் தெரிவித்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசு காப்பகத்தில் சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும் அரசு இத் தகவல்களை மறைப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து கான்பூர் மாவட்ட நிர்வாகம் அந்த ஏழு சிறுமிகள் எப்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளில் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் என்றும் மற்றொருவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கான்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள தகவலில், ஒரு சிறுமி நவம்பர் 30, 2019 அன்று காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மற்றொரு சிறுமி ஆக்ராவிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 2-ம் தேதி கொண்டுவரப்பட்டார். அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு சிறுமிகள் இட்டா நகரத்தில் இருந்து ஜனவரி 23 மற்றும் பிப்ரவரி 23 ஆகிய தேதிகளில் கான்பூருக்கு மாற்றப்பட்டனர். அதில், ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 19, 2019 அன்று அக்காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மற்றொரு சிறுமியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பெரோஸோபாத்தில் இருந்து பிப்ரவரி 16 அன்று அழைத்து வரப்பட்ட சிறுமிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 9 அன்று மற்றொரு சிறுமி இந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 சிறுமிகளில் 2 சிறுமிகள் 8 மாத கர்ப்ப காலத்தைக் கடந்துள்ளனர். அதனால், மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு சிறுமிகளில் நான்கு சிறுமிகளின் போஸ்கோ சட்டத்தின்கீழ் வரும் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் மூன்று சிறுமிகள் கட்டாய திருமணம் அல்லது கடத்தலில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.