Published:Updated:

`சேஸிங்’ இளைஞருக்கு சரமாரி அடி, உதை! - சர்ச்சையில் இமாச்சலப்பிரதேச போலீஸார் #Viralvideo

போலீஸார்

போலீஸார் தொடர்ந்து இரக்கமின்றி தாக்கியபோது அவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். இருந்தும், போலீஸார் தொடர்ந்து அவரை மிகவும் மோசமான முறையில் தாக்கியிருக்கிறார்கள்.

`சேஸிங்’ இளைஞருக்கு சரமாரி அடி, உதை! - சர்ச்சையில் இமாச்சலப்பிரதேச போலீஸார் #Viralvideo

போலீஸார் தொடர்ந்து இரக்கமின்றி தாக்கியபோது அவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். இருந்தும், போலீஸார் தொடர்ந்து அவரை மிகவும் மோசமான முறையில் தாக்கியிருக்கிறார்கள்.

Published:Updated:
போலீஸார்

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதை கடந்த அக்டோபரில் திறக்கப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்திலுள்ள மணாலியையும், லடாக்கின் லே நகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் நீளமான இந்த இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்துடன் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்தச் சுரங்கப்பாதையை தினம் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுவந்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று இமாச்சலப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், அடல் சுரங்கப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணமாக அங்கு ஏராளமான வாகனங்கள் திரும்பிச் செல்ல இயலாமல் திக்குமுக்காடி நின்றன. தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீஸார் அங்குள்ள வாகனங்களை மீட்டனர்.

அப்போது வரிசையாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் அங்கிருந்த சுற்றுலாப்பயணியான இளைஞர் ஒருவர் தனக்கு முன்பு நின்ற வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முயன்றார். அதைத் தடுத்து நிறுத்திய போலீஸார் சிலர் அந்த இளைஞரை வண்டியிலிருந்து வெளியே வரவழைத்து மண்டியிடவைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

போலீஸார் தொடர்ந்து அவரை இரக்கமின்றி தாக்கியபோது, அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார். இருந்தும், போலீஸார் தொடர்ந்து அவரை மிகவும் மோசமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்கள் நகர்ந்ததால், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார். இந்தச் சம்பவம் முழுவதையும் அருகிலிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மணாலியிலுள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத் தலைவரான குப்த் ராம், ``போலீஸாரின் இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் மீது விசாரணை நடத்தப்படவிருப்பதாக அப்பகுதி காவல் நிலைய அதிகாரியான கௌரவ் சிங் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு மணாலி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான சஞ்சீவ் ஷர்மா உத்தரவிட்டிருக்கிறார்.

இளைஞர் மீது தாக்குதல்
இளைஞர் மீது தாக்குதல்

இமாச்சலப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருவாயை ஒவ்வோர் ஆண்டும் ஈட்டித் தருகிறது. அங்குள்ள போலீஸாரின் இது போன்ற செயல்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை சார்ந்து தொழில் நடத்திவரும் தொழிலாளர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

அடல் சுரங்கப்பாதை நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக மூன்று விபத்துகள் அங்கே அரங்கேறியது கடந்த ஆண்டு பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.