Published:Updated:

சி.எம் தங்கிய அறை வாடகை; எதிர்த்த வியாபாரி! -தூத்துக்குடியில் வைரலான ஆடியோ

உப்பு உற்பத்தி

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கிச் சென்றதற்கான அறை செலவை ஏற்றுக் கொள்ளாததால், அதிகாரிகள் பழிவாங்குவதாக வேதனைப்படுகிறார் உப்பு உற்பத்தியாளர்.

சி.எம் தங்கிய அறை வாடகை; எதிர்த்த வியாபாரி! -தூத்துக்குடியில் வைரலான ஆடியோ

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கிச் சென்றதற்கான அறை செலவை ஏற்றுக் கொள்ளாததால், அதிகாரிகள் பழிவாங்குவதாக வேதனைப்படுகிறார் உப்பு உற்பத்தியாளர்.

Published:Updated:
உப்பு உற்பத்தி

`` என்ன சார் எப்படி இருக்கீங்க..? சி.எம் தூத்துக்குடிக்கு வந்தப்போ ஹோட்டல்ல தங்கின ரூம் பில் ரூ.18,115-ஐ அந்த ஹோட்டல்ல கட்டி பில் வாங்கிக்கோங்க” என மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பன், உப்பு உற்பத்தியாளர் பேச்சிமுத்து என்பவரிடம் பேசிய 2 ஆடியோக்கள் வாட்ஸ் அப்களில் வைரலாகி வருகிறது.

பேச்சிமுத்துவிடம் பேசினோம், “தூத்துக்குடி, தருவைகுளம் கிராமத்தில் உப்பளம் அமைத்து 30 வருசமா உப்பு உற்பத்தித்தொழில் செய்துட்டு வர்றேன். கடந்த 05.02.2020-ம் தேதி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் தலைமையில் எனது உப்பளத்திற்கு வந்து நேரில் ஆய்வு செஞ்சாங்க. அப்போது, உப்பளத்திலுள்ள குடோனில் தூத்துக்குடி உப்பு வியாபாரிகள் சிலர், அவர்களது பிராண்டுகளில் போட்டு வைத்திருந்த உப்புப் பாக்கெட்டுகள் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

பேச்சிமுத்து- உப்பு உற்பத்தியாளர்
பேச்சிமுத்து- உப்பு உற்பத்தியாளர்

அத்துடன், உப்பு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதற்கான மத்திய அரசின் புதிய உரிமமும் எடுக்கவேண்டும் எனச் சொன்னதன் அடிப்படையில் உடனடியாக அந்த லைசன்ஸ்-ஐ வாங்கிவிட்டேன். அடுத்து சில நாட்கள் கழித்து 27.02.2020-ம் தேதி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், என்னை எனது செல்போனில் தொடர்பு கொண்டு, ’ திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்புவிழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வந்து தங்கிச் சென்றதற்கான ரூம் வாடகை பாக்கி ரூ.18,115-ஐ செலுத்த வேண்டியது இருக்கிறது. அதைக் கட்டி ரசீது வாங்கிக்கோங்க’ என என்னிடம் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு நான் அவரிடம், ’நான் ஒரு வியாபாரி அல்ல. உப்பை உற்பத்தி மட்டுமே செய்யும் சிறு விவசாயி. என்னால் அவ்வளவு பணம் தரமுடியாது' எனவும் சொன்னேன். இதன்பிறகு கடந்த 15.05.2020 அன்று மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து எனக்கும் எனது உதவியாளர் வேல்சாமிக்கும் ஒரு நோட்டீஸ் வந்தது.

அதில், எங்களுடைய உப்பு, `தப்புக்குறியீடு' என்றும், `தரம் குறைவு' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேல்முறையீடு செய்ய விரும்பினால், 30 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உப்பு உற்பத்தி
உப்பு உற்பத்தி

மேல்முறையீட்டு கட்டணமான ரூ.5,900-க்கான டி.டியும் எடுத்து அனுப்பினேன். மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியின் முன்னிலையில்தான் உப்பை மேல்முறையீட்டிற்கு அனுப்ப முடியும். ஆனால், நான் பலமுறை நேரில் சென்றும் சரியான பதில் கூறவில்லை. இதனால், உப்பை மேல்முறையீட்டுக்கு அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், தங்களது மேல்முறையீட்டு விண்ணப்பம் சரியாகப் பூர்த்தி செய்யலைன்னு காரணம் சொல்லி மனுவை நிராகரிச்சிட்டார். முதலமைச்சர் தங்கிச் சென்றதற்கான ரூம் செலவை நான் ஏற்றுக் கொள்ளாததால் வேண்டுமென்றே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என்றார்.

பொதுவாக சில நிகழ்ச்சிகளை நடத்தும்போது, வணிகர்களிடம் ஸ்பான்சர் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில்தான் நானும் அவரிடம் கேட்டேன்.
உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பன்

இதுகுறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பனிடம் பேசினோம், “ பொதுவாக சில நிகழ்ச்சிகளை நடத்தும்போது, வணிகர்களிடம் ஸ்பான்சர் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில்தான் நானும் அவரிடம் கேட்டேன். அதுவும் கட்டாயமாகக் கேட்கவில்லை. உங்களால் கட்ட முடியுமா என்று நட்பாகத்தான் கேட்டேன். அவர் உப்பளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பின் தரம் குறைவு என்பதற்காகத்தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

உப்பளம்
உப்பளம்

மற்றபடி, ஸ்பான்சர் செய்யாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அவர் கூறுவது தவறானது” என்றார்.

’உப்பின் தரம் குறைவு என்பது ஒரு காரணமாகவே இருந்தாலும், முதல்வர் பெயரைச் சொல்லி ஸ்பான்சர் கேட்பது சரியா? எனவும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதேபோல அதிகாரிகள், அவர்களது துறைக்கு உட்பட்ட வணிகர்களிடம் மறைமுகமாக ஸ்பான்சர் கேட்பது தொடர்கதையாகி வருகிறது எனப் புலம்புகிறார்கள் வணிகர்கள்.