Published:Updated:

``ரூ.2,500 கோடி கொடுத்தால் நீங்கள்தான் முதல்வர் என்றார்கள்" - கர்நாடக எம்எல்ஏ பேச்சால் புது சர்ச்சை

எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் ( ட்விட்டர் )

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ கூறியது தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால், ``அரசியலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சிலர் டெல்லி சென்று சோனியா, நட்டாவை சந்திக்கவைக்கிறோம் என்றும் கூறுவர். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தேர்தல் நெருங்கும்போது இத்தகைய மோசடிகள் ஆரம்பமாகும். இத்தகையோரை நம்பி அரசியல் வாழ்க்கையை பாழ் செய்துகொள்ள வேண்டாம்.

ஒருமுறை என்னிடமும் 2,500 கோடி ரூபாய் கொடுத்தால் என்னையும் முதல்வராக்குகிறோம் என்று கூறினார்கள். எனக்கோ 2,500 கோடி என்றால் எவ்வளவு பணம்... இந்தப் பணத்தை எங்கே வைத்திருப்பார்கள் என்றே சிந்திக்கிறேன். எனவே முதல்வர் பதவிக்கு டிக்கெட் வழங்கும் இந்த ஏஜென்ட்டுகள் ஒரு பெரிய மோசடிக் கும்பல்" எனப் பேசினார்.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் கருத்துகளுக்கு பதிலளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில், "யத்னாலின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் இது தேசியப் பிரச்னை. இது குறித்து நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும். உயர் பதவியைப் பெறுவதற்காக பெரும் தொகையைக் கேட்ட ஏஜென்ட்டுகள் இருப்பதாக வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism