Published:Updated:

கரூர்: `கலெக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்!' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி
வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

`கரூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள தி.மு.க வாக்காளர்களை நீக்க முனைப்பு காட்டுறாங்க. அதற்கு, மாவட்ட ஆட்சியரே ஆளுங்கட்சிக்கு சார்பாக செயல்பட களத்தில் இறங்கியிருக்கறது, வியப்பாகவும், விநோதமாகவும் இருக்கிறது. ஆளுங்கட்சிச் சார்பாக வரும் தேர்தலில் பணியாற்ற வந்த மாதிரி தெரிகிறது.’

"கரூர் தொகுதியிலுள்ள தி.மு.க வாக்காளர்கள் 25,000 பேரை நீக்க ஆளுங்கட்சியினர் நூதனமாக முயற்சி பண்றாங்க. அதற்கு, மாவட்ட ஆட்சியர் துணைபோகிறார். கரூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்புக்கு வந்த பத்து நாள்களுக்குள்ளேயே ஆளுங்கட்சிக்கு சார்பாக நடக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மீது, கோர்ட்டில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம்" என்று சொல்கிறார், செந்தில் பாலாஜி.

வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி
வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசனார் செந்தில் பாலாஜி.

``கரூரிலுள்ள 1,031 பூத்களிலும் ஆளுங்கட்சியினர், தி.மு.க வாக்காளர்களைச் சம்பந்தப்பட்ட தொகுதியைவிட்டு நீக்க முயற்சி பண்றாங்க. கரூர் தொகுதியிலுள்ள ஒரு பூத்தில் மட்டும் 207 தி.மு.க சார்புள்ள வாக்காளர்களை நீக்க முயற்சி பண்றாங்க. அந்த பூத்தில் நிரந்தர முகவரிகளில், சொந்த வீடுகளில் பல வருடங்களாகக் குடியிருக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் அவர்களை நீக்குவதற்காக, வாக்காளர் பட்டியலில் தொடர் எண்ணைக் குறியிட்டு, மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு ஆளுங்கட்சியினர் பட்டியல் வழங்கியிருக்கிறார்கள்.

கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

அதை கலெக்டர், பூத் லெவல் அலுவலர்களிடம் கொடுத்து, ஃபார்ம் 7 ஏ படிவத்தை பூர்த்திசெய்து, அவர்களை நீக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். சில அலுவலர்கள், `இப்படி செய்தால் பிரச்னை வருமே மேடம்?'னு கேட்டிருக்காங்க. ஆனால், `உத்தரவு போடுற நான் மாவட்ட ஆட்சியர். நான்தான் மாவட்டத் தேர்தல் அதிகாரி. நான் போடுற உத்தரவைச் செயல்படுத்துங்க' என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

 பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக இருக்கும் மணிராஜன், 45 வருஷமாக ஒரே முகவரியில் வசிக்கிறார். மூன்று முறை கரூர் நகர்மன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் பெயரை நீக்கச் சொல்லி, வாக்காளர் பட்டியலில் ரவுண்ட் போட்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். இப்படி கரூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள தி.மு.க வாக்காளர்களை நீக்க முனைப்பு காட்டுறாங்க. அதற்கு, மாவட்ட ஆட்சியரே ஆளுங்கட்சிக்கு சார்பாக செயல்பட களத்தில் இறங்கியிருப்பது, வியப்பாகவும் விநோதமாகவும் இருக்கிறது. மலர்விழி, கரூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று பத்து நாள்கள்தான் ஆகின்றன. அவரிடம், கொஞ்ச நாள்வரையாவது நேர்மையை எதிர்பார்த்தேன். ஆனால், அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஆளுங்கட்சிக்கு சார்பாக வரும் தேர்தலில் பணியாற்ற வந்த மாதிரி தெரிகிறது.

தி.மு.க வாக்காளர்களை நீக்க முயற்சிக்கும் அ.தி.மு.க-வினரின் இந்தச் செயல், தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதுமையாக இருக்கிறது. புதிதாக வாக்காளர் பட்டிலில் சேர நினைப்பவர்கள், முகவரி மாறுபவர்கள், இறந்துபோனவர்களை பட்டியலிலிருந்து நீக்கக் கோருபவர்கள் என எல்லாவற்றையும் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அல்லது வாக்காளர்களின் உறவினர்கள்தான் செய்வாங்க. அவங்கதான் அதற்குரிய 6, 7 ஏ உள்ளிட்ட படிவங்களை பூர்த்தி செய்து, அலுவலர்களிடம் கொடுப்பாங்க. பூத் லெவல் அலுவலர்கள், அந்தப் படிவங்களைவைத்து, நேரடியாக வந்து ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பிரச்னையைத் தீர்ப்பாங்க. ஆனால், அ.தி.மு.க-வினர் எடுத்த லிஸ்ட்டை, கலெக்டர் அலுவலர்களிடம் கொடுத்து, அவர்களை வைத்து நீக்கச் சொல்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

கரூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும், தி.மு.க-வுக்குச் சார்பான 25,000 வாக்காளர்களை நீக்குவதுதான் அவர்களின் இலக்கு. அதேநேரம், வேறு தொகுதிகளைச் சேர்ந்த 10,000 அ.தி.மு.க வாக்காளர்களை கரூர் சட்டமன்றத் தொகுதியில் சேர்க்க நினைக்கிறார்கள். வேறு பகுதிகளிலிருந்து, கரூரிலுள்ள ஒரு கம்பெனி ஒன்றில் பணிபுரியும் 20 பேரை, அந்த கம்பெனி முகவரியை வைத்து கரூர் வாக்காளர்களாகச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வினரின் இந்த முயற்சியை நாங்கள் செயல்படுத்த விடமாட்டோம்.

கரூர்: `தி.மு.க பிரமுகர் இறப்புக்கு காரணம் போலீஸ்தான்!’ - செந்தில் பாலாஜி ஆவேசம்

ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அப்போதைய கலெக்டர் அன்பழகன், அ.தி.மு.க-வுக்குச் சார்பாக நடந்துகொண்டு, `தேர்தலை நிறுத்துவேன்' என்று ஜோதிமணியிடம் சவால்விட்டார். ஆனால், அத்தனை தடைகளையும் மீறித்தான் தி.மு.க கூட்டணியில் ஜோதிமணியை 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தோம். அதனால், வரும் தேர்தலில், அ.தி.மு.க என்ன பித்தலாட்டம் பண்ணினாலும், தி.மு.க கூட்டணிதான் 234 தொகுதிகளிலும் ஜெயிக்கப்போகிறது. கரூரிலுள்ள நான்கு தொகுதிகளிலும், தி.மு.க-தான் ஜெயிக்கும். தளபதி ஸ்டாலினை மக்கள் முதல்வராக்க முடிவு செய்துவிட்டார்கள். வேண்டுமானால், கரூரிலுள்ள மொத்த வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கினால், அ.தி.மு.க நினைப்பு ஈடேற வாய்ப்பிருக்கிறது.

வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி
வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இப்படி, முறைகேடு செய்ய முயலும் அ.தி.மு.க-வினர் மீதும், கலெக்டர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். ஆளும் அடிமை எடப்பாடி அரசாங்கம், தேர்தலில் மக்களைச் சந்திக்க அஞ்சி, இப்படிக் குறுக்குவழியைத் தேடுகிறது. அதற்கு, ஒரு மாவட்ட ஆட்சியரே உடந்தையாக இருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு, வரும் தேர்தல்தான் இறுதித் தேர்தல். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து, அவர்களைவைத்து, கரூர் தொகுதியிலுள்ள தி.மு.க வாக்காளர்களை இனம்கண்டு, இப்படி அவர்களை நீக்கி, வேறு தொகுதிகளில் அவர்களின் பெயர்களைச் சேர்க்க முயல்கிறார்கள். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார் ஆவேசமாக!

அடுத்த கட்டுரைக்கு