Published:Updated:

கோவை அனுராதா விபத்து: ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள்?

அ.தி.மு.க கொடி
News
அ.தி.மு.க கொடி

விபத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவந்த நிலையில், அங்கு கொடிக் கம்பமே இல்லை என்பதன் மூலம் இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்?

``நீதிமன்றம் பேனர்தானே வைக்கக் கூடாது'னு சொல்லியிருக்கு. கொடி வைக்கக் கூடாது'னு சொல்லலயே" – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``கோவையில், அ.தி.மு.க கொடி சாய்ந்து விபத்துக்குள்ளான அனுராதாவுக்கு அரசு வேலை" – அமைச்சர் சரோஜா.

``விபத்து நடந்த இடத்தில் அ.தி.மு.க கொடியே இல்லை" – அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்.

ஒரே விபத்துக்கு, அரசு இயந்திரங்கள் அளித்த நகை முரணான பதில்கள் இவை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் அனுராதா என்கிற ராஜேஸ்வரி. பணிக்குச் சென்றால்தான் உணவு என்ற கட்டாயத்தில் குடும்பச் சுமைகளைத் தலையில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் கோடிக்கணக்கான பெண்களில் அனுராதாவும் ஒருவர். அந்த ஒரு விபத்து, அனுராதாவை முடமாக்கி, அவரது பெற்றோரை ரணமாக்கியுள்ளது.

அனுராதா
அனுராதா

கடந்த 11-ம் தேதி காலை அவிநாசி சாலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார் அனுராதா. அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அ.தி.மு.க கொடிக் கம்பம் விழும் நிலையில் இருந்துள்ளது. அதை தவிர்ப்பதற்காக, அனுராதா திடீரென பிரேக் போட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வண்டி ஸ்கிட்டாகி, அவர் கீழே விழ, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறிவிட்டது. கால்களில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுராதாவின் இடது கால் அகற்றப்பட்டுவிட்டது.

விபத்து
விபத்து

எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், வலது காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

``அ.தி.மு.க கொடிக் கம்பம்தான் இந்த விபத்துக்குக் காரணம்" என்று அனுராதாவை மருத்துவமனையில் அனுமதித்தவர் தொடங்கி, வேடிக்கை பார்த்தவர்கள் வரை எல்லோரும் சொல்கின்றனர். ஆனால், அ.தி.மு.க–வினர் இந்த விபத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போலவே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

விபத்துக்கு முந்தைய தினம்தான், அ.தி.மு.க யோகாமாஸ்டர் சுவாமி போதிவர்தன் – தாமரை இல்லத் திருமணம் நடைபெற்றது. மேலும், விபத்து நடந்த அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றிருந்தார்.

இதற்காக, அவிநாசி சாலையில் குறிப்பிட்ட தூரத்துக்கு அ.தி.மு.க கொடி வைக்கப்பட்டிருந்தது. இது அந்த வழியே சென்ற அனைவருக்கும் தெரியும். மேலும், விபத்து நடந்த இடத்தில் அ.தி.மு.க கொடி கம்பங்கள் கீழே கழற்றி வைக்கப்பட்டிருந்த படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

அ.தி.மு.க பிரமுகர் திருமணம்
அ.தி.மு.க பிரமுகர் திருமணம்

இதனால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விபத்து நடந்த அடுத்த நாளே, ``நீதிமன்றம் பேனர்தானே வைக்கக் கூடாது என்று சொல்லியிருக்கு. கொடிக் கம்பம் வைக்கக் கூடாது'னு சொல்லலயே?" என்று பேட்டியளித்தார்.

ஆனால், அவரது அமைச்சரவையில் இருக்கும் சரோஜாவோ, ``அ.தி.மு.க கம்பம் விழுந்து காயமடைந்துள்ள அனுராதாவுக்கு அரசு வேலை கொடுக்கப்படும்" என்று அறிவித்தார். தற்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``விபத்து நடந்த இடத்தில் அ.தி.மு.க கொடியே இல்லை" என்று கூறியுள்ளார்.

அனுராதா
அனுராதா

விபத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவந்த நிலையில், அங்கு கொடிக் கம்பமே இல்லை என்பதன் மூலம் இவர்கள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள்?.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, தி.மு.க-வும், ட்ராஃபிக் ராமசாமியும்தான் அ.தி.மு.க-வுக்கு பெரிய தலைவலியாக இருக்கின்றனர். விபத்து நடந்த அன்றைய தினமே ஸ்டாலின் ட்வீட் போட, விஷயம் காட்டுத்தீயாகப் பரவியது. போதாக்குறைக்கு தி.மு.க இந்த விஷயத்துக்காக போராட்டம் நடத்தியது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் அனுராதா பெற்றோரை நேரில் சந்தித்து, செயற்கைக் கால் அமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஐந்து லட்ச ரூபாய் நிதி அளித்தார். மறுபக்கம், ட்ராஃபிக் ராமசாமி சட்டப் போராட்டம் நடத்தி குடைச்சலைக் கொடுத்துவருகிறார்.

இதனால், தற்போது விபத்து நடந்த இடத்தில் அ.தி.மு.க கொடிக் கம்பமே இல்லை என்று கூறத் தொடங்கிவிட்டனர். ஸ்டாலின் விசிட்டுக்குப் பிறகு, அனுராதாவின் பெற்றோரை தனது இல்லத்துக்கு வரவழைத்த அமைச்சர் வேலுமணி, அனுராதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக, அவரது பெற்றோர் நன்றி கூறியதாக புகைப்படத்துடன் அறிக்கை விடுத்துள்ளார்.

வேலுமணி
வேலுமணி

பாதிக்கப்பட்டவர்களை நேரில்கூட சென்று பார்க்க முடியவில்லை என்றால், இவர்கள் யாருக்காக ஆட்சி செய்கிறார்கள்? தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க பணம்தான் முக்கியம். அதுதான் அனுராதாவின் குடும்பத்துக்கும் பிரச்னை. அதற்கு உங்கள் அரசு என்ன செய்தது வேலுமணி அவர்களே?

`நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க' என்று 5-க்கு 50 மதிப்பெண் போட்டு, நீங்கள் தம்ஸ்அப் காட்டும் போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டி உள்ளாட்சித் தேர்தலுக்கு ப்ரமோஷன் செய்ய முடியும் உங்களால், விமான நிலையத்தின் அருகில் இருக்கும் அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று அனுராதாவின் பெற்றோரைச் சந்திக்க நேரமில்லையா? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை அவர்களின் இடத்துக்குச் சென்று சந்திப்பீர்களா?

வேலுமணி போஸ்டர்
வேலுமணி போஸ்டர்

தொடர்ந்து, பேனராலும் கொடிக் கம்பத்தாலும் விபத்து ஏற்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டியா?

காவல்துறையைப் பொறுத்தவரை, 2017-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரால் உயிரிழந்த ரகு வழக்கில் என்ன நடைமுறையைக் கையாண்டதோ, அதே நடைமுறையைத்தான் இந்த வழக்கிலும் கடைப்பிடிக்கிறது. ரகு வழக்கிலும் சரி, அனுராதா வழக்கிலும் சரி சிசிடிவி காட்சிகள் வெளியாகவேயில்லை.

ரகு விபத்து
ரகு விபத்து

இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது லாரி ஓட்டுநர்கள்தான். சரி, லாரி ஓட்டுநர்கள் மீதுதான் தவறு என்றால், சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? யாரைக் காப்பாற்ற அவை மறைக்கப்படுகின்றன?

அனுராதாவின் இடதுகால் அகற்றப்பட்டுள்ள நிலையில், வலது காலில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் அவருக்கு முழுமையாக நினைவு வரவில்லை. நினைவு திரும்பினாலும், கால் அகற்றப்பட்ட அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. அதனால், அவரை மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

மருத்துவமனையில் 
 அனுராதா
மருத்துவமனையில் அனுராதா

அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களின் மீது இருக்கும் அக்கறையைவிட, தங்கள் கட்சிப்பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதில்தான் அதிக அக்கறை. அனுராதாவின் நினைவு திரும்பும்போது அவருக்கு ஏற்படும் அதிர்ச்சியைவிட அதிக அதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இனியேனும் கட்சிகள் இந்த விஷயத்தில் திருந்துமா?