விஜய் மல்லய்யா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதைத்தான் மத்தியப் பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரமும்... வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லய்யா, நிரவ் மோடி போன்றவர்கள் விவகாரமும்தான் முக்கியமான விவாதங்களாக இருக்கப்போகின்றன என்பதை பி.ஜே.பி உணர்ந்துவிட்டது. எனவே, தேர்தலுக்கு முன்பாக விஜய் மல்லய்யாவை இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டுவந்து சிறையில் அடைப்பதில் தீவிரம் காட்டுகிறது மத்திய அரசு. இதில் வெற்றி கிடைக்குமா?

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய மல்லய்யா, 2016 மார்ச்சில் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து அவரை நாடுகடத்தி இந்தியாவுக்குக் கூட்டிவர சி.பி.ஐ முயற்சி எடுத்தது. இந்த வழக்கில் கைதான மல்லய்யா, சில நிமிடங் களிலேயே ஜாமீனில் வந்துவிட்டார். ‘‘இந்தியாவில் இருக்கும் சிறைகள் மோசம். அவற்றில் எந்த வசதிகளும் இல்லை. சிறையில் வி.ஐ.பி போல நடத்தினால் இந்தியாவுக்கு வரத் தயார்’’ என 2017 நவம்பரில் மல்லய்யா சொல்லியிருந்தார்.

மல்லய்யாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை 2017 டிசம்பரில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடங்கியது. ‘‘மல்லய்யா 62 வயது முதியவர். அவருக்கு இந்தியச் சிறைகளில் பாது காப்போ, அடிப்படை வசதிகளோ கிடைக்காது. இயல்பான சூரிய வெளிச்சம் வரும்விதமாகவும், தூய்மையான காற்று உள்ளே வரும்விதமாகவும் இந்திய சிறைகள் இல்லை. எலெக்ட்ரிக் அடுப்பில் இருப்பது போன்ற சூழலில் கைதிகள் அங்கு இருக்கிறார்கள்’’ என அவரின் வழக்கறிஞர் வாதிட்டார். மல்லய்யாவை இந்தியாவுக்குக் கொண்டுவந்து, மும்பையின் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க சி.பி.ஐ தீர்மானித்திருந்தது. எனவே, அந்தச் சிறையின் புகைப்படங்களைச் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ-க்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் Barrack 12 என்ற தனிச் சிறை உள்ளது. சிறைக்குப் பெரிய மதில் சுவர் உண்டு. அதைத் தாண்டியும் இந்த 12-ம் எண் உயர் பாதுகாப்புத் தனிச்சிறைக்கு இன்னொரு மதில் சுவர் இருக்கிறது. மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தார். கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு இந்தச் சிறையில் இன்னொரு வி.ஐ.பி இருந்தார். அவர், மகாராஷ்ட்ர முன்னாள் துணை முதல்வர் சகன் புஜ்பல். பண மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற அவர், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். எனவே, இப்போதைக்கு முக்கியக் குற்றவாளிகள் யாரும் இல்லாத இங்கு தான் மல்லய்யாவை அடைக்கத் தீர்மானித்தார்கள்.

இந்தச் சிறையின் புகைப்படங்கள்தான் லண்டன் கோர்ட்டுக்குப் போயின. ஆனால், ‘இந்தப் புகைப்படங்களை நம்ப முடியவில்லை. கிராஃபிக்ஸ் காட்சிகள் போல உள்ளன’ என பிரிட்டிஷ் சிறை நிபுணர் ஆலன் மிட்செல் என்பவர் அறிக்கை கொடுத்தார். மல்லய்யாவின் வழக்கறிஞர்கள் இதைக் காட்டி முட்டுக்கட்டை போட்டனர். எனவே, ‘சிறையை வீடியோ எடுத்துத் தாக்கல் செய்யுங்கள்’ எனக் கடந்த ஜூலை 31-ம் தேதி நீதிமன்றம் சொன்னது.

இதைத் தொடர்ந்து, இந்தத் தனிச்சிறையில் இரண்டு அறைகள் புதுப்பிக்கப்பட்டன. தரையைப் பெயர்த்துவிட்டுப் புதிதாக டைல்ஸ்கள் பதித்துள்ளனர். பாத்ரூம் புதுப்பிக்கப்பட்டு, வாஷ் பேசின் உள்ளிட்டவை பதிக்கப்பட்டன. ஃபிளஷ் வசதியுடன் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப் பட்டது. இயற்கை வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் விதமாக சுவர்களுக்கு இதமான வண்ணத்தில் புது பெயின்ட் அடித்துள்ளனர். சிறை அறை 300 சதுர அடியில் இருப்பதால், மல்லய்யா தாராளமாகப் புழங்க முடியும். வாக்கிங் போக வெளியில் வராண்டாவும் இருக்கிறது. தரையிலிருந்து 20 அடி உயரத்தில் கூரை இருப்பதால், அறையில் புழுக்கம் இருக்காது. மின் விசிறியும் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும். வென்டிலேட்டர் வழியாக காற்றும் வரும்; வெளிச்சமும் வரும். அறையில் 40 இன்ச் டி.வி., கட்டில் எனச் சகல வசதிகளும் உண்டு.

இந்திய சிறைகளில் இதுவரை வீடியோ எடுத்ததில்லை. முதல்முறையாக மல்லய்யாவுக்காக இந்தச் சிறையை வீடியோ எடுத்து லண்டனுக்கு அனுப்பி, செப்டம்பர் 12-ம் தேதி இந்த எட்டு நிமிட வீடியோவை நீதிபதிக்குப் போட்டுக் காட்டினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த மல்லய்யா, ‘‘சிறை அறை நன்றாக இருக்கிறது’’ எனத் திருப்தி தெரிவித்தாராம். எனினும் அவரின் வழக்கறிஞர், ‘‘நான் நேரில் சென்று சிறையைப் பார்க்க வேண்டும்’’ என்றார். கூடவே, ‘‘மல்லய்யாவுடன் அடைக்கப்படும் மற்ற கைதிகள் யார், யார்? அவர்களால் மல்லய்யாவுக்கு ஆபத்து வருமா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.

டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. மல்லய்யாவை மத்திய அரசால் இந்தியாவுக்கு அழைத்து வர முடிந்தால், அது தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடும்.

- தி.முருகன்