Published:Updated:

நாடு கடத்த ஒப்புதல்: இந்த முறையாவது இந்தியா கொண்டு வரப்படுவாரா விஜய் மல்லையா?

நாடு கடத்த ஒப்புதல்: இந்த முறையாவது இந்தியா கொண்டு வரப்படுவாரா விஜய் மல்லையா?
நாடு கடத்த ஒப்புதல்: இந்த முறையாவது இந்தியா கொண்டு வரப்படுவாரா விஜய் மல்லையா?

ந்தியாவில் பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த, அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

நாடு கடத்த ஒப்புதல்: இந்த முறையாவது இந்தியா கொண்டு வரப்படுவாரா விஜய் மல்லையா?

கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மல்லையா, தனது தொழில் அபிவிருத்திக்காக வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக்  கடன் வாங்கினார். அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்குத் தப்பியோடினார். இதையடுத்து, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடங்கினர். இதன்படி, கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மல்லையா மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த நிலையில், இந்தியாவிலுள்ள சிறைகள் சுகாதாரமற்று இருப்பதாகக் கூறிய மல்லையா,  தன்னை அடைக்கப்போவதாக கூறப்படும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் போதிய காற்று மற்றும் வெளிச்ச வசதிகள் இருக்காது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்திய அரசு சார்பாக கொடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில், ஆர்தர் ரோடு சிறையில் மல்லையா அடைக்கப்பட இருக்கும் அறையில் உள்ள அனைத்து வசதிகளும் காட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கி, இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி தீர்ப்பளித்தது.  

இதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து, அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து உள்துறை அமைச்சக பேச்சாளர், மல்லையாவை நாடு கடத்துவதற்கு பிப்ரவரி 3-ம் தேதியன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இருப்பினும் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அவருக்கு 14 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், தம்மை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். எப்படியாவது தாம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மல்லையா மேற்கொள்வார் என்பதால், இந்த முறையேனும் அவர் நாடு கொண்டு வரப்படுவரா என்பது குறித்த சந்தேகம் நீடிக்கத்தான் செய்கிறது.