பத்தே பேருந்துகள் வைத்துள்ள ஒரு தனியார் நிறுவனம், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் பார்க்கிறது. ஆனால், 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளை வைத்திருக்கும் அரசுப் போக்குவரத்துக்கழகம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கிக்கிடக்கிறது. ஊழல், முறைகேடு, நிர்வாகச் சீர்கேடு... என்று இதற்கான காரணங்கள் ஏராளம்.

இந்தநிலையில், பராமரிப்புக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், ஊழலால் போக்கு வரத்துக் கழகங்கள் சிக்கிச் சீரழிவதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் புள்ளிவிவரங்களுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ். தமிழகம் முழுவதும் உள்ள போக்கு வரத்துக் கழகங்களில் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புக் காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பது தான் அவர் கேட்டுள்ள முக்கியக் கேள்வி. இதன்படி கடந்த 2012, ஜனவரி முதல் 2018 மே மாதம் வரை போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பராமரிப்புக்காக மட்டுமே செலவழித்தது தெரியவந்துள்ளது.

மேற்கண்ட காலகட்டத்தில் பேருந்து களுக்கு டயர் ‘ரீ பெல்ட்’ போட்டதற்கு 200 கோடி ரூபாய், புதிய டயர் மற்றும் டியூப்களுக்காக 303 கோடி ரூபாய் என்று மொத்தம் 503 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் மட்டும், 2015–2018 மூன்று ஆண்டு காலகட்டத்தில் 85,483 புதிய டயர்களும், 2,37,720 ‘ரீ பெல்ட்’ டயர்களும் பொருத்தப் பட்டுள்ளன. புதிய டயர் ஒன்றுக்கு ரூ.9,270 வீதமும், ‘ரீ பெல்ட்’ டயர் ஒன்றுக்கு ரூ.2,959 வீதமும் செலவிடப்பட்டுள்ளது.

கோவை கோட்டத்தில் 2,28,705 ‘ரீ பெல்ட்’ டயர்களைப் பொருத்துவதற்கு ரூ.67 கோடியும், மதுரை கோட்டத்தில் 5,363 ‘ரீ பெல்ட்’ டயர்களைப் பொருத்து வதற்கு ரூ. ஒரு கோடியே 38 லட்சமும், சேலம் கோட்டத்தில் 70,600 புதிய டயர்கள் பொருத்துவதற்காக ரூ.71 கோடியும் செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம், கோவை, சேலம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம் விரைவு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் பராமரிப்புக்காக, ஆறு ஆண்டுகளில் மட்டும், ரூ.1,690 கோடியே 51 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. இப்படிப் புதிய டயர் மற்றும் ‘ரீ-பெல்ட்’ டயர் பொருத்துதல், பராமரிப்புச் செலவு எல்லாம் சேர்த்து, மொத்தம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளனர்.

சரி, இவ்வளவு செலவு செய்திருக் கிறார்களே, அந்தப் பேருந்துகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிய, கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் என்று மூன்று முக்கியப் பேருந்து நிலையங்களில் கள ஆய்வு செய்தோம். பெரும்பாலான பேருந்துகளில் ‘ரீ-பெல்ட்’ டயர்களே பொருத்தப்பட்டிருந்தன. புதிதாகவிடப்பட்டுள்ள நீல நிறப் பேருந்து மற்றும் ஒரு சில பழைய பேருந்துகளில் மட்டுமே புதிய டயர்களைப் பார்க்க முடிந்தது. அரிதாக சில பேருந்துகள் மட்டுமே நல்ல பராமரிப்பில் இருப்பதைப்போலத் தோற்றமளித்தன.

இதுதொடர்பாக போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் சிலரிடம் பேசினோம். “பேருந்தின் முன்பகுதியில் புதிய டயர்தான் போட்டு ஓட்ட வேண்டும். ஆனால், 90 சதவிகிதப் பேருந்துகள் ‘ரீ-பெல்ட்’ டயர்களில்தான் ஓடிக்கொண்டிருக் கின்றன. புதிய டயர் போட்டுச் சேதாரமானால் இழப்பு ஏற்படும் என்று கூறி ‘ரீ-பெல்ட்’ டயர்களைப் பயன்படுத்துகின் றனர். ‘ரீ-பெல்ட்’ டயர்களைப் பொறுத்தவரை, A+, A, B, C என்று தரம் பிரிக்கப்படுகின்றன. முதல் தரத்திலான டயர்கள் A+ மற்றும் A பிரிவில் அடங்கும். இந்த டயர்கள் தான் முன்பகுதியில் பொருத்தப்பட வேண்டும். B மற்றும் C வகை ‘ரீ-பெல்ட்’ டயர்கள் பின்பகுதியில் பொருத் தப்பட வேண்டும். ஆனால், தரம் குறைந்த B, C வகை டயர்களே பெரும்பாலும் முன்பகுதியிலும் பொருத்தப் படுகின்றன. இவற்றுக்கும் முதல் தர டயர்களுக்கும் வெளித்தோற்றத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது’’ என்றனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘‘டயர் வாங்குவதிலும், மற்ற உதிரிப் பாகங்கள் வாங்குவதி லும் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. பார்ப்பதற்குப் புதிய பாகங்கள் போலத் தெரிந்தாலும், உள்ளே பழைய பாகங்கள்தான் பொருத்தப் பட்டிருக்கும். போக்குவரத்துத்துறை லாப, நஷ்டத்தைத் தாண்டி, சேவை மனப்பான்மையில் இயக்கப்படுகி றது என்று சொல்வது எல்லாம் மிகப்பெரிய பொய். மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. மக்களிடம் தனியார் பேருந்துக்கும் சற்றே குறைவாகத் தான் கட்டணம் வசூலிக்கின்றனர். அதிலும் உள்ளூருக்குள் ஓடும் அரசு டவுன் பேருந்துக் கட்டணங்கள், தனியார் பேருந்துகளைவிட அதிகமாக இருக்கின்றன. தவிர, பெரும்பாலான ரூட்களில் அரசுப் பேருந்துகள்தான் இயக்கப் படுகின்றன. ஒவ்வொரு அரசுப் பேருந்துக்கும் வணிகரீதியாக டார்க்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டார்க்கெட்டை நிறைவேற்ற நடத்துநர்களை டார்ச்சர் செய் கிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில்தான் இயங்குகின்றன. ஆனால், அந்த லாபத்தை ஊழல்களின் வழியாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். இதில் பாதிப்படைந்திருப்பது போக்குவரத்துக் கழக ஊழியர்களும் பொதுமக்களும் தான்” என்றார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மேற்கண்ட புள்ளிவிவரங்களை வெளிக்கொண்டு வந்திருக்கும் டேனியல் ஜேசுதாஸ் கூறுகையில், “எந்தப் போக்குவரத்து கழகங்களிலும் பராமரிப்புப் பணிகள் முறையாக நடப்பதே இல்லை. முறைகேடுகளே அதிகம் நடக்கின்றன. கோவையில் உள்ள 1,181 அரசுப் பேருந்துகளில், பெரும்பாலானவை எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே இயங்குகின்றன. முக்கியமான பாகங்களை மட்டும் அவ்வப்போது மாற்றிப் போட்டு, பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். 2013-14 நிதியாண்டில் மட்டும், போக்குவரத்துத்துறைக்கு 7,342 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இவர்களால் சிறந்த சேவையை வழங்க முடிய வில்லை. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் துறையில், அந்த மக்களே ஆபத்தான பயணத்தைத் தான் மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள், இரண்டாயிரம் கோடி ரூபாய் பராமரிப்புக்காகச் செலவு செய்ததில், நூற்றுக் கணக்கான புதிய பேருந்துகளையே வாங்கியிருக் கலாம். கட்டணத்தில் மற்ற மாநிலப் போக்கு வரத்துத் துறையுடன் ஒப்பிடும் அரசாங்கம், சேவையில் மட்டும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதில்லை” என்று பொரிந்துதள்ளினார்.

இதுகுறித்துப் பேசிய அம்மா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் சதீஸ்குமார், “அதிகாரி களின் அலட்சியத்தால்தான் போக்குவரத்துக் கழகம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ‘பி.எஸ்-3’ ரகத்தைச் சேர்ந்த 45 பேருந்து சேஸ்களை டாடா கம்பெனியில் வாங்கியிருந்தனர். ஆனால், அவற்றைப் பதிவே செய்யாமல் சித்தோடு, பொள்ளாச்சி, உடுமலை F.C (Fitness certificate) யூனிட்டில் போட்டது போட்டபடி நிறுத்திவைத்திருந்தனர். வெயிலிலும், மழையிலும் நின்று அவை துருப்பிடித்துப் பழுதடைந்து வீணாகிவிட்டன. ஒரு சேஸின் விலை மட்டும் 17 லட்சம் ரூபாய். இப்படி அதிகாரிகளின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துவருகிறது. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என்று அனைவருக்கும் இதைப் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அனுப்பி விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. R.C (Recondition) மற்றும் F.C யூனிட்கள், பவானிசாகர் பயிற்சி மையம், அம்மா குடிநீர் விற்பனை நிலையங்களில், ஓய்வு பெற்ற மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாகப் பணி அமர்த்துகின்றனர். இதன் மூலம் நிரந்தரப் பணியாளர்களுக்குப் பணி வழங்காமல், ஊதிய இழப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வா தாரத்தையே பாதிக்கச் செய்கின்றனர். அதிகாரிகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதைக் கவனத்தில் கொள்ளாமல் ஓட்டுநர், நடத்துநர் போன்ற தொழிலாளர்களின் சம்பளத்தால்தான் நிதிச்சுமை ஏற்படுகிறது என்று கூறி எங்களைப் பழிவாங்குகின்றனர்” என்றார்.

டேனியல் ஜேசுதாஸுக்கு மேற்கண்ட தகவல்கள் உடனடியாகக் கிடைத்துவிடவில்லை. பலமாதங்கள் அலைச்சலுக்குப் பிறகே அவற்றைத் தந்திருக்கிறது சம்பந்தப்பட்ட துறை. அப்படி இருந்தும் சில கோட்டங்களில் தகவல்கள் வழங்கப்படவில்லை. அதையும் சேர்த்தால், இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்காகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரைப் பலமுறை தொடர்பு கொண்டோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரது உதவியாளர் என்று சொல்லி ஒருவர் செல்போனை எடுத்தார். “எல்லாம் ஆன்லைன் டெண்டர்... நீங்க எதுவாக இருந்தாலும் நேரில் வாங்க” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். நாம் மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை அவர் எடுக்கவில்லை. மேலும், ‘எப்போது வர வேண்டும், எங்கே வரவேண்டும்?’ என்று கேட்டும், விளக்கம் கேட்டும் குறுந்தகவலும் அனுப்பினோம். அதற்கும் பதில் அளிக்கவில்லை. பதிலுக்காக ஒரு வாரம் காத்திருந்தோம். அப்போதும் பதில் வராமல் போகவே... மார்ச் 2-ம் தேதி மாலை 6.14 மணிக்கு இதுதொடர்பானத் தகவல்களைக் குறிப்பிட்டு, விளக்கம்கேட்டு அமைச்சரின் போக்குவரத்துத் துறை சார்ந்த transec@tn.gov.in மின்னஞ்சல் முகவரிக்கும், தொகுதி எம்.எல்.ஏ என்ற வகையில் அவரது mlakarur@tn.gov.in மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். இந்தக் கட்டுரை அச்சுக்குப் போகும்வரை அமைச்சர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

- இரா.குருபிரசாத், படங்கள்: கே.அருண்