Published:Updated:

கிடப்பில் போடப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் - தண்ணீருக்காக தவிக்கும் சிதம்பரம் மக்கள்

கிடப்பில் போடப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் - தண்ணீருக்காக தவிக்கும் சிதம்பரம் மக்கள்
கிடப்பில் போடப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் - தண்ணீருக்காக தவிக்கும் சிதம்பரம் மக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடுத்து  மக்களின் வரிப் பணத்தில் ரூ 7 கோடியே  18 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது. வேகமாக நடந்து வந்த இப்பணிகள் திடீரென  கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் இதற்கு என அமைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் உபயோகம் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது.

சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் மட்டும் மிகவும் குறைந்து தற்பொழுது 800 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. மேலும் சிதம்பரம் நகருக்குக் குடி நீர் வழங்கிவரும் வக்கரமாரி ஏரியும் நீர் இன்றி வற்றி வருகிறது. அதனால் சிதம்பரம் நகருக்குக் குடிநீர் வழங்க நிலத்தடி நீரை  மட்டுமே நம்ப  வேண்டிய  நிலை உள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதே நிலையில் அதிக அளவில் நிலத்தடி நீர் குடி நீருக்காக உறிஞ்சப்பட்டால், கடல் நீர் உள்ளே புகுந்து உவர் நீராக மாறிக் குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்படும். எனவே நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே சிதம்பரம் நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.