Published:Updated:

கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகள் சுவிட்சர்லாந்து பயணம்!

விகடன் விமர்சனக்குழு
கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகள் சுவிட்சர்லாந்து பயணம்!

புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் குறித்து விசாரணை நடத்த இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்கின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விவரத்தை சுவிட்சர்லாந்து அரசிடம், இந்தியா பலமுறை கேட்டும், அந்நாட்டு அரசு தர மறுத்து வருகிறது.

இதையடுத்து, இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுவிட்சர்லாந்து சென்று கருப்பு பண விவகாரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்திய வரி மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு இன்னும் ஒரு வாரத்தில் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வருவாய் செயலர் ஷக்திகந்தா தாஸ் மற்றும் சேர்மன் சவுத்ரி ஆகியோர் தலைமையிலான இரு அதிகாரிகள் அடங்கிய குழு சுவிட்சர்லாந்து செல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் மற்றும் அங்குள்ள வங்கிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும், அந்நாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் ரகசிய கணக்குகள் குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.