Published:Updated:

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

Published:Updated:

ழலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த அன்னா ஹசாரேவின் பெயர் நாடு முழுவதும்

##~##
உச்சரிக்கப்பட்டது போலவே, சென்னை பெரியார் திடலிலும் ஒலித்தது, இல்லை... உரிக்கப்பட்டது! 

'ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள் யார்?’ என்ற தலைப்பில் கடந்த 22-ம் தேதி, பெரியார் திடலின் நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. அன்னா ஹசாரே மீது விடாது பொழிந்த கி.வீரமணியின் வசைமாரியில், சில துளிகள்...

''ஊழல் ஒழிப்பு வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், அதை ஒழிக்கப் போவதாகச் சொல்லிக்​கொண்டு, புது அவதாரம் எடுத்து இருக்கும் சிலரின் உண்மை முகங்களை, உலகுக்கு எடுத்து உரைக்க வேண்டியது நம் கடமை. மலிவான விளம்பரத்தைத் தேடிக்கொண்டு, ஏதோ அடுத்த மகாத்மாபோல தங்களைக் காட்டிக்கொள்வதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது. அன்னா ஹசாரே, மதவாத

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

சக்திகளின் ஊதுகுழலாக செயல்படுகிறார். 'ஜன் லோக்பால் என்ற பெயரில் அமைய உள்ள அந்த கமிட்டியில் ஐந்து பேர் அரசாங்கத்தைச் சேர்ந்த​வர்களாக இருக்க வேண்டும். மீதி ஐந்து பேர் நான் சுட்டிக் காட்டும் நபர்கள்’ என்றார் அன்னா ஹசாரே. அவர் கூறிய ஐந்து பேரில் சந்தோஷ் ஹெக்டே தவிர யாரும் உத்தமர் கிடையாது. சாந்தி பூஷணும், பிரசாந்த் பூஷணும் மாயாவதிக்கு செய்த சேவைக்குப் பிரதி உபகாரமாக நொய்டாவில் நிலம் வாங்கி இருக்கிறார்கள். 'நான்கு கோடி கொடுத்தால், நீதிபதிகளை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம்’ என்று முலாயம் சிங்கிடம் பேரம் பேசிய இந்த புண்ணியவான்களைத்தான், அன்னா ஹசாரே கமிட்டியில் சேர்த்து இருக்கிறார். சமீபத்தில், அவரது முகத் திரையும் கிழிந்துவிட்டது.

புனேவைச் சேர்ந்த ஹேமந்த் பாபுராவ் பாட்டீல் என்பவர், சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டிருக்கிறார். அதில் அவர், 'அன்னா ஹசாரே நடத்தி வரும் என்.ஜி.ஓ. அமைப்பு இதுவரை முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய அமைப்பு, மகா​ராஷ்டிர அரசிடம்

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

2 கோடியும், இன்னும் சில பண மோசடிகளும் செய்து இருக்கிறது. நில விவகாரங்களிலும் அதன் தலையீடு இருந்தது. எனவே, அன்னா ஹசாரேவை, லோக்பால் கமிட்டி​யில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கேட்டு இருக்​கிறார். இதுதான் அன்னா ஹசாரே என்ற அந்த ஜூனியர் மகாத்மாவோட லட்சணம்! இப்படி அந்த கமிட்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராகப்

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

பிரச்னைகளில் சிக்குவதைப் பார்க்கும்போது, 'கோழி திருடுனவனும் கும்பல்ல சேர்ந்து கூச்சல் போடுறான்’ என்ற கிராமத்துப் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது. ஊழலுக்கு எதிராக இவர்கள், எந்த முகத்தை வைத்துக்கொண்டு குரல் கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

நீதிமன்றம் செய்ய வேண்டிய வேலைகளில் தலையிடும் விதமாகத்தான் லோக்பால் கமிட்டி அமைக்கப்படுகிறது.  'இப்படித்தான் செய்யணும்... அப்படித்தான் இருக்கணும்’னு அன்னா ஹசாரே, மத்திய அரசை மிரட்டுவாராம். அவர்களும் 'ஆமாம் சாமி’ போடுவார்களாம். உண்ணாவிரதம் என்ற பேரில் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறீர்களா? காந்தி உண்ணா​விரதம் இருந்தபோதே, தந்தை பெரியார் அதை ஏற்றுக்​கொள்ளவில்லை. ஆகவே, உங்கள் நாடகத்தை நாங்கள் நம்ப மாட்டோம். இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிமுறையின் கீழ் இந்த கமிட்டி அமைக்கப்படுகிறது? சட்டத்துக்கு உட்படாத ஒரு கமிட்டி இது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, மொத்தம்

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

80 லட்சம் வசூல்! அந்த நான்கு நாள் ஸ்டன்ட்டுக்கு ஆன செலவே

ஹசாரேவை ஆதரிக்கும் நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்காம நடிக்கட்டும்!

50 லட்சமாம். இந்தப் பணம் எந்தக் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்​டியது? ஒரு உண்ணாவிரதப் போராட்டத்துக்காக பெரும் தொகையை செலவு செய்தவருக்கு, 'தேர்தலில் குறிப்​பிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும்’ என்று சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது. அந்த மேடையில் பாரத மாதாவின் படமும், காவிக் கொடியும் இருந்ததை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அவருக்கு ஆதரவு கொடுத்த கோஷ்டி யார் தெரியுமா? நரேந்திர மோடி, ராம்தேவ், அக்னிவேஷ். இதில் இருந்தே அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் இயக்கப்படுகிறார் என்று தெரியவில்லையா? திருப்பதி உண்டியலில் இனிமேல் யாரும் பணமாகப் போடக் கூடாது. எல்லோரும் செக் அல்லது டிராஃப்ட் எடுத்துத்தான் போட வேண்டும் என்று இவர்கள் குரல் கொடுப்பார்களா? அப்படி ஒரு சட்டம் வந்தால், இப்போது உண்டியலில் கொட்டுவதில் பாதிகூட கொட்டாது. ஏன் என்றால், அங்கே பாதிப் பேர் கொண்டுவந்து கொட்டுவது கறுப்புப் பணம்தான். சில நடிகர்கள், 'நான் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறேன்’னு கிளம்பி இருக்கிறார்கள். நீங்கள் கறுப்புப் பணம் வாங்காமல் நடிங்கய்யா... ஊழல் தானாகவே ஒழியும்!'' என்று கிண்டல் அடித்​தார்.

- தி.கோபிவிஜய்

படங்கள்:  அ.ரஞ்சித்