கடந்த டிசம்பர் 10-ம் தேதி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில், நாரணமங்கலம் ஏரியா

விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ஏரியாவே குலுங்கிவிட்டது!

ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜி னாமா செய்த ஒரு சில தினங்களில், 'ஆ.ராசாவின் நண்பரான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸின் சாதிக் பாட்சா, எங்களை மிரட்டி... குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, எம்.ஆர்.எஃப் கம்பெனிக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டார்!’ என்ற புகார் கிளம்பியது. அதுபற்றிய புகாரோடு பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமாரைச் சந்திக்க, நாரணமங்கலம் ஏரியாவாசிகள் கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் வந்தார் கள். இதுபற்றி ஏற்கெனவே ஜூ.வி-யில் விரிவாக எழுதியிருந்தோம்.

டிசம்பர் 8-ம் தேதி ஆ.ராசா மற்றும் அவர் தொடர்பான இடங்களில் ரெய்டு அடித்த சி.பி.ஐ. அதிகாரிகள்,

அதில் சாதிக் பாட்சாவை முக்கியமாகக் குறிவைத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களைக் குடைந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில், தைரியமும் நம்பிக்கையும் வரப்பெற்றவர்களாக புதிய உத்வேகத்துடன் கலந்துகொண்டார்கள் கிராம மக்கள்.

போராட்டக் குழுத் தலைவர் செல்லத் துரையைச் சந்தித்தோம். ''மூன்று விஷயங்களை கோரிக்கையாவெச்சு இந்தப் போராட்டத்தை நடத்துறோம். நில மோசடி தொடர்பா சி.பி.ஐ. விசாரணை நடத்தணும். எங்கள் நிலத்துக்கு உரிய முழுத் தொகையை எங்களுக்குப் பெற்றுத் தரணும். நிலம் கொடுத்தவங்களுக்கு குடும்பத்தில் ஒருத்தருக்கு எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் வேலை தரணும்!'' என்றார் அவர்.

விவசாயிகளுக்காக முன்னின்று போராடும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், ''இந்த மோசடியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவங்க ஏமாற்றப்பட்டு இருந்தாலும், அதிகமா ஏமாற்றப்பட்டது தலித் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான். நிலம் கொடுத்தவர்களில் 60 விவசாயிகள் தலித்கள். அதில் 15 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான தொகையைக் கொடுத்து ஏமாற்றி இருக்காங்க!'' என்றவர், அப்படி ஏமாற்றப்பட்ட தலித் விவசாயிகள் சிலரை நம்முன் நிறுத்தினார்.

''எங்க பூர்வீக நிலம் ஒரு ஏக்கர் இருந்தது. அது எங்க அம்மாயி தைலம்மை மூலமா... எங்க அம்மா

அம்மாசிக்கு கொடுக்கப்பட்ட நிலம். அதை விலைக்கு கேட்டவங்க, 'ஒரு ஏக்கர் நிலத்தோட விலை

1 லட்சம். நிலம் தொடர்பான டாக்குமென்ட்களை எடுக்க

25 ஆயிரம் செலவு ஆகும்... அதனால்,

75 ஆயிரம் தர்றோம்’னு சொன்னாங்க. 'அவ்வளவுதான் விலையா? குறைச்சலா இருக்கே?’ன்னு கேட்டதுக்கு... 'முடிஞ்சா கையெழுத்துப் போடு. இல்லைன்னா, எங்களுக்குப் பிரச்னை இல்லை. நிலத்தை எங்க பேருக்கு எப்படி மாத்திக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் பண்ண முடியாது...’ன்னு மிரட்டினாங்க. வேற வழி இல்லாமக் கொடுத்துட்டோம்!'' என்றார் மணிவேல் என்பவர்.

பாப்பண்ணன் என்பவர், ''எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருந்தது. 'ஒழுங்கு மரியாதையா நிலத்தைக் குடுத்திருங்க. அப்புறம், நிலத்தை கவர்மென்ட் எடுத்துக் கிட்டா, உங்களுக்குப் பணமே கிடைக்காது’ன்னு சொன் னாங்க. கூடவே, ஏக்கருக்கு

95 ஆயிரம் தர்றதா சொன் னாங்க. நானும் எழுதிக் கொடுத்துட்டேன்...'' என்றார் அப்பாவியாக.

பரமசிவம் விவகாரம் வேறு மாதிரி. ''எனக்கு கிணத்தோட ரெண்டு ஏக்கர் நிலம் இருந்தது.அதனால், ஏக்கருக்கு ரெண்டரை லட்சம் தர்றதாசொன்னாங்க. சொன்ன மாதிரியே ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் வெச்சு கையெ ழுத்து வாங்கிட்டு, பணத்தைக் கொடுத்தாங்க. அப்புறம் ராத்திரி 11 மணிக்கு மேல், 10 பேர் கும்பலா வந்தாங்க. 'உனக்கு ஜாஸ்தியாப் பணம் கொடுத்துட்டோம்’னு சொல்லி, ஒண்ணே கால் லட்சத்தை மிரட்டித் திரும்ப வாங்கிட்டுப் போயிட்டாங்க!'' என்றார்.

நாரணமங்கலம் விவசாயிகள், சாதிக் பாட்சாவைவிட, தங்களை மிரட்டி நிலத்தை வாங்கிக் கொடுத்த புரோக்கர்கள் மீதுதான் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்!

''இப்போதுகூட இந்த ஆர்ப்பாட்டத் துக்கு கிராம மக்கள் யாரும் போகக் கூடாதுன்னு பிரச்னை செய்தாங்க.ஆட்டோ, வேனில் மொத்த மாகப் போய் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்குவாங் கன்னு, வாகனம் தரவிடாமல் மிரட்டி னாங்க. 'உங்களுக்கு மேற்கொண்டு பணம் தர்றதா முடிவு செஞ்சிருக் கோம். நீங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கலைன்னா, அந்தப் பணம் கிடைக்கும். கலந்துகிட்டா சல்லிக்காசு கிடைக்காது’ன்னு சொல்லி இன்னும் சிலரை வரவிடாமல் தடுத்துட்டாங்க!'' என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப் பட்ட காலகட்டத்தில் பணியாற்றிய பத்திரப் பதிவுத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளையும் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

பெரம்பலூர் ரெய்டுக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு, நாரணமங்கலம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் விவரம் முன்கூட்டியே தெரியவர... விவசாயப் பிரதிநிதி ஒருவரைத் தொடர்புகொண்டு, நில மோசடிபற்றி விலாவாரியாக விசாரித்தார்களாம். அதில், ஓர் அதிகாரி மட்டும் பெரம்பலூரிலேயே தங்கி இருந்து, ஆர்ப்பாட்ட விவரங்களைக் கவனமாகக் குறிப்பெடுத்துச் சென்றாராம்.

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்