Published:Updated:

சேகர் ரெட்டிக்கு அடுத்த செக்!

Vikatan Correspondent
சேகர் ரெட்டிக்கு அடுத்த செக்!
சேகர் ரெட்டிக்கு அடுத்த செக்!
சேகர் ரெட்டிக்கு அடுத்த செக்!

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். பண மாற்றத் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 171 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி பணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான புதிய பணம் குறித்தும், 171 கிலோ தங்கக் கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதா?  என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.