Published:Updated:

அமெரிக்காவுக்கு கப்பலேறிய தமிழக மானம்: 'காக்னிசன்ட்' லஞ்ச விவகாரப் பின்னணி!

தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு 50,000 டாலரை அபராதமாகக் கட்ட முன்வந்துள்ளார் ஸ்ரீதர் திருவேங்கடம்.

காக்னிசன்ட்
காக்னிசன்ட்

தமிழ்நாட்டின் மானம், அமெரிக்காவுக்குக் கப்பல் ஏறியிருக்கிறது. எஸ்.இ.சி என்கிற அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையம் (Securities Exchange Commission), சென்னையில் உள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனம் குறித்து விவாதிக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எனப்படும் அந்த நாட்டின் பிரபல பொருளாதாரப் பத்திரிகை, தமிழக அரசைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. 'அடடா... முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்கப் பயணத்துக்கு இவ்வளவு பெரிய பலன் கிடைத்திருக்கிறதா!' என அவசரப்பட வேண்டாம். விரிவாக படிக்க க்ளிக் செய்க...

எஸ்.இ.சி வெளியிட்ட தகவல் இதுதான். 'அமெரிக்காவின் காக்னிசன்ட் நிறுவனம், தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடமும் இணைக்கப்படுகிறார். லஞ்சப் பரிமாற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுத்ததில் இவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது.' இந்தத் தகவல் வெளியானதும், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு 50,000 டாலரை அபராதமாகக் கட்ட முன்வந்துள்ளார் ஸ்ரீதர் திருவேங்கடம்.

ஆண்டுக்கு 16 பில்லியன் டாலருக்குமேல் வர்த்தகம் செய்யும் முக்கிய அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட்டின் தொழில் நடைமுறை மற்றும் உயரதிகாரிகள் குறித்த செய்தி என்பதால், இது 'வால் ஸ்ட்ரீட்' ஜர்னலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

காக்னிசன்ட்
காக்னிசன்ட்

உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கும் நிறுவனம் 'காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்'. அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் தனது கிளையை நிறுவ முற்படுகிறது. இது ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-2016 காலகட்டத்தில் நடந்தது. இந்த நிறுவனத்தின் 27 லட்சம் சதுர அடி கட்டட அனுமதிக்கு (17,500 பேருக்கு வேலைவாய்ப்பு), 2014-ல் தமிழக அரசின் உயர் அதிகாரிகள்14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். அரசைப் பகைத்துக்கொண்டு இங்கு தொழில் நடத்த முடியாது என்பதால், அந்த நிறுவனத்தினர் கட்டட ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் மூலம் அதிகாரிகளுக்கு லஞ்சப் பணத்தைக் கொடுக்க முற்பட்டனர்.

ஆனால், இந்த இடைத்தரகு வேலையைச் செய்ய, கட்டட ஒப்பந்த நிறுவனம் மறுக்கிறது. பிறகு, கட்டட ஒப்பந்தப் பணியே கைவிட்டுப்போய்விடும் என்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இதனால், தரகு வேலைக்கு அந்தக் கட்டட ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. லஞ்சம் 14 கோடி ரூபாய்; இடைத்தரகுக்கு கமிஷன் 3.5 கோடி ரூபாய் என்று முடிவாகிறது. 2014-ம் ஆண்டு மே, ஜூனில் 14 கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை, தமிழக அரசின் உயரதிகாரிகள் தரப்பு பெற்றுக்கொள்கிறது. 2014 நவம்பர் மாதத்தில் கட்டட அனுமதிக்கு ஒப்புதல் கிடைக்கிறது.

அமெரிக்காவின் பங்குச்சந்தை ஆணையம் மற்றும் அமெரிக்க நீதிமன்றம் ஆகியவற்றின் விசாரணைக்குள்ளாகி, அந்த நிறுவனம் 25 மில்லியன் டாலர் (175 கோடி ரூபாய்) அபராதம்

இதேபோல், காக்னிசன்ட் நிறுவனம் தனது சிறுசேரி கிளையின் கட்டட அனுமதிக்காக 2012-ல் ஆறு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இதைக் கொடுக்காவிட்டால் மின் அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவை கிடைக்காது என அழுத்தம் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இவ்வாறாக, முதலில் 14 கோடி ரூபாய், பிறகு ஆறு கோடி ரூபாய் என மொத்தம் 20 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறுகிறது. இதுதான் இத்தனை ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் பெரிய அளவில் விவகாரமாகியிருக்கிறது. அமெரிக்காவின் பங்குச்சந்தை ஆணையம் மற்றும் அமெரிக்க நீதிமன்றம் ஆகியவற்றின் விசாரணைக்குள்ளாகி, அந்த நிறுவனம் 25 மில்லியன் டாலர் (175 கோடி ரூபாய்) அபராதம் கட்டுவதற்கு ஒப்புக்கொள்ளும் அளவுக்குச் சிக்கல் உருவானது.

> சிக்கியது எப்படி? எவை அந்தக் கறுப்பு ஆடுகள்? - சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், ஜூனியர் விகடன் இதழில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > லஞ்சம் ரூ.20 கோடி... அபராதம் ரூ.175 கோடி... காக்னிசன்டைக் கதறவிட்ட தமிழக அதிகாரிகள் https://www.vikatan.com/news/controversy/tamilnadu-officials-and-the-cognizant-controversy

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/