Published:Updated:

திட்டப்பணி தீர்மானங்கள் பதிவேற்றாதது ஏன்?

கோவை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் கிளம்பும் முறைகேடு புகார்

திட்டப்பணி தீர்மானங்கள் பதிவேற்றாதது ஏன்?

கோவை மாநகராட்சியில் கிளம்பும் முறைகேடு புகார்

Published:Updated:
கோவை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
கோவை மாநகராட்சி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.

அவை தனி அலுவலர்களின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றாமல் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து, சமூகச் செயற்பாட்டாளரான எஸ்.பி.தியாகராஜன் நம்மிடம் பேசினார். ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும். கோவை மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு எதுவும் பதிவேற்றப்படவில்லை. ஆனால், மாநகராட்சி செய்திக் குறிப்புகளை அப்டேட் செய்கிறார்கள். இதனால், மாநகராட்சியில் என்ன பணிகள் நடைபெறுகின்றன என்பது மக்களுக்குத் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை.

எஸ்.பி.தியாகராஜன் - நா.கார்த்திக் - ஷ்ரவன்குமார்
எஸ்.பி.தியாகராஜன் - நா.கார்த்திக் - ஷ்ரவன்குமார்

எனவே, இது தொடர்பாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறைமன்ற நடுவத்தில் புகார் அளித்தேன். விசாரணை நடத்திய முறைமன்ற நடுவம், ‘மாநகராட்சியின் விளக்கங்கள் ஏற்புடையதல்ல. தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என 2018, ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தீர்மானங்கள் பதிவேற்றப்படவில்லை. தொடர்ந்து, ‘உங்களது உத்தரவு அமல்படுத்தவில்லை’ என மீண்டும் முறைமன்ற நடுவத்தில் புகார் அளித்தேன். தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளது முறைமன்ற நடுவம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றிவிட்டால் முறைகேடுகள் வெளியாகிவிடும் என அதிகாரிகள் அஞ்சுவதே இதற்கு காரணம்’’ என்றார்.

இதுகுறித்து, சிங்காநல்லூர் தொகுதி தி.மு.கழக எம்.எல்.ஏ-வான நா.கார்த்திக் கூறுகையில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் நடந்தியிருந்தால் மாநகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியும். ஒவ்வொரு வார்டிலும் எந்த ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்திருக்கிறார், எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன உட்பட அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும். தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலகட்டத்தில் மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பதே யாருக்குமே தெரியவில்லை. கேட்டால், ‘இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், சென்னை தவிர வேறு எந்த மாநகராட்சியிலும் தீர்மானங்களைப் பதிவேற்றவில்லை’ என்கிறார்கள்.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு அதிகளவு ஒப்பந்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. மற்ற ஒப்பந்ததாரர்கள் மிரட்டப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல் மீண்டும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தீர்மானங்களைப் பதிவேற்றவில்லை. இதனால், கோவை மாநகராட்சி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடர்பான தீர்மானங்களை உடனடியாக இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்’’ என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமாரிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘2017 ஜூன் மாதம் வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் பிறகு, சென்னை தவிர உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ‘அர்பன் ட்ரீ இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (Urban Tree Information System) என்கிற மென்பொருளை இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. மேலும், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், ‘ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளிநபர்களுக்கு வழங்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது. மாமன்றத் தீர்மானங்களில் பெரும்பாலானவை ஒப்பந்ததாரர்களின் சொந்த விவரங்களை உள்ளடக்கியவை. நீதிமன்றத் தடையைப் பதிவேற்றினால் அது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகிவிடும். மற்றபடி இதில் ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

தி.மு.கழக எம்.எல்.ஏ-வான நா.கார்த்திக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டோம். ‘‘சிலர் அரசியல் செய்வதற்காக இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். தி.மு.க

எம்.எல்.ஏ-வான கார்த்திக், செய்திகளில் தான் இடம்பெற வேண்டும்... தன் கட்சித் தலைவரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார். அவர் சொல்வதுபோல் நிச்சயம் நடக்கவில்லை. நூற்றுக்கு நூறு சதவிகிதம் பணிகள் நேர்மையாக நடைபெறுகின்றன. `சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாகத்தான் தீர்மானங்கள் பதிவேற்றப்படவில்லை’ என்று என்னிடமும் மாநகராட்சியில் சொன்னார்கள். அதேபோல் வேண்டப்பட்டவர்கள், வேண்டாதவர்கள் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அனைத்துத் தரப்பு மக்களுமே எனக்கு வேண்டப்பட்டவர்கள்தான்’’ என்றார் நிதானமாக.