Election bannerElection banner
Published:Updated:

தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!

சுருளி அருவி
சுருளி அருவி

சுருளி அருவி அருகே கட்டப்பட்ட சமையலறைக் கட்டடத்தை, அரசுச் செலவில் கட்டியதாக போலிக் கணக்கு எழுதிய வனவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது சுருளி அருவி. தினமும் நூற்றுக்கணக்கானோர், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கானோர், அருவிக்கு வருகை தருவது வழக்கம். மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட சுருளி அருவியை வனத்துறை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அருவிக்குச் செல்ல கட்டணமும் வசூல் செய்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட சுருளி அருவி, ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் இப்போது வரை திறக்கப்படவில்லை.

சுருளி அருவி
சுருளி அருவி

சுருளி அருவியில், மக்கள் தங்களது முன்னோர்களுக்குத் திதி உட்பட சடங்குகள் செய்வது வழக்கம். மேலும், அங்கேயே சமைத்து, அன்னதானமும் செய்வர். மக்களின் வசதிக்காக, கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அருவி வளாகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில், சமையலறை, மக்கள் அமர்ந்து சாப்பிடும் மண்டபம் ஆகியவற்றைக் கட்டிக்கொடுத்தார்.

Vikatan

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கட்டடத்தில் இருந்த ரமேஷ் பெயர் பொறித்த கல்வெட்டை வனத்துறை அதிகாரிகள் பெயர்த்து எடுத்திருக்கிறார்கள். பின்னர், அதை மறைத்துவைத்துவிட்டு, அரசுச் செலவில் கட்டடம் கட்டியதாக போலிக் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டியதாகச் சர்ச்சை எழுந்தது.

சுருளி அருவி
சுருளி அருவி

இந்தநிலையில், மேகமலை உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டடம் கட்டிக்கொடுத்த ரமேஷ் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சுருளி அருவி வனவர் திலகர், 5,35,500 ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுருளி அருவியில் `திடீர் கட்டண உயர்வு’ - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

குகனேஷின் விசாரணை அறிக்கை, மேகமலை வன உயிரினச் சரணாலயப் பாதுகாவலர் போன்ஸ்லே சச்சின் துக்காராமிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில், வனவர் திலகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் போன்ஸ்லே. மேலும், சுருளி அருவியில் இதேபோல வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கின்றனவா என விசாரித்துவருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வெட்டு
கல்வெட்டு
தேனி: சிறுவனின் உயிரைப் பறித்த அரசு கட்டடத்துக்காகத் தோண்டப்பட்ட குழி! - என்ன நடந்தது?

தனிநபர் ஒருவர், பொதுநலனைக் கருத்தில்கொண்டு கட்டிக்கொடுத்த கட்டடத்தைக் காண்பித்து, அரசை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய சம்பவம், தேனி மாவட்ட வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு