அலசல்
அரசியல்
Published:Updated:

‘முண்டு’ மோடி... ‘காவி’ டவுசர்... - சி.பி.எம்-காங். மோதலாக மாறிய ராகுல் யாத்ரா!

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

போராடும் மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்’ என்று அவர் உறுதியளித் தது ஆளும் சி.பி.எம் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத் தியது.

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’, கேரளாவுக்குள் காலடி எடுத்துவைத்ததும், சி.பி.எம் - காங்கிரஸ் இடையிலான அரசியல் போராக மாறியிருக்கிறது!

வயநாட்டிலுள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்தை உடைத்த சம்பவத்தைத் தொடர்ந்து கேரளாவில் காங்கிரஸுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் இடையே மோதல் மூண்டது. இரு கட்சி அலுவலகங்களும் மாறி மாறித் தாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைப் பயணத்தைச் சீர்குலைக்க சி.பி.எம் அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் விமர்சித்தது.

‘முண்டு’ மோடி... ‘காவி’ டவுசர்... - சி.பி.எம்-காங். மோதலாக மாறிய ராகுல் யாத்ரா!

இந்த நிலையில், கேரள மாநில அரசு ஆர்வம் காட்டிவரும் விழிஞ்ஞம் அதானி வர்த்தகத் துறை முகத் திட்டம் மற்றும் கே-ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார் ராகுல். அப்போது, ‘போராடும் மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்’ என்று அவர் உறுதியளித் தது ஆளும் சி.பி.எம் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத் தியது. எனவே, ராகுலின் நடைப்பயணத்தை ‘கன்டெய்னர் களின் பயணம்’ என சி.பி.எம் நிர்வாகி எம்.ஸ்வராஜ் கிண்டலடித்தார். அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும், ‘இது பாரத் ஜோடோ-வா அல்லது சீட் ஜோடோ-வா... 18 நாள்கள் கேரளாவில் நடைப்பயணம், ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்கள்தான். இதுதான் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து போராடுவதற்கான வழியா?’ என்று விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘நடைப்பயணம் எப்படி, ஏன் திட்டமிடப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். பி.ஜே.பி-க்கு ‘ஏ’ அணியாகச் செயல்படும் ‘முண்டு மோடி’யின் (வேட்டி கட்டிய மோடி) மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் சின்னத்தனமான விமர்சனம் இது’’ எனக் காரசாரமாக பதிலடி கொடுத்தார். இதனால் கோபமடைந்த கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, “இது கேரள மாநிலம். கும்பலாக எதிரணிக்குத் தாவும் பண்பாடு எங்களிடம் இல்லை. அவர்களின் (பா.ஜ.க) ஒரே ஒரு அக்கவுன்ட்டையும் நாங்கள் க்ளோஸ் செய்த மாநிலம் இது. எனவே, அங்கே சென்று ‘ஹோம் வொர்க்’ செய்யுங்கள். மலையாளிகளுக்கு உடுக்க வேட்டி உண்டு. உங்களுக்கு டவுசர்தான் இருக்கிறது. அதுவும் காவி டவுசர்” எனக் காட்டமானார்.

இதுபற்றி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறும்போது, “ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் சி.பி.எம் கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கைகோக்க வேண்டியவர்களுடன் இப்படி மோதிக்கொள்வதுதான், ‘ஒற்றுமை நடைப்பயண’த்தின் நோக்கமா?!