கட்டுரைகள்
Published:Updated:

க்யூட் கீ செயின்

க்யூட் கீ செயின்
பிரீமியம் ஸ்டோரி
News
க்யூட் கீ செயின்

உங்களுக்குப் பிடித்த நிறத்தில் பிடித்த பொம்மைகளைச் செய்து அசத்துங்கள்!

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... க்யூட்டாக ஒரு கீசெயின் செய்யலாமா? இதற்குத் தேவை கலர்ஃபுல்லா ஒரு ஹேர்பேண்டு'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் ஆசிரியை ஷோபனா. வாங்க செஞ்சு அசத்தலாம்!

க்யூட் கீ செயின்

தேவையானவை:

●ஹேர்பேண்டு - 1

●கீசெயின் வளையம் - 1

●நூல்

●கத்தரிக்கோல்

●ஸ்டிக்கர் பொட்டு அல்லது கூக்ளி ஐ

●டெக்ரெட்டிவ் ரிப்பன் - அரை மீட்டர்

க்யூட் கீ செயின்

ஸ்டெப் 1:

வளையமாக இருக்கும் ஹேர்பேண்டை பின்புறமாகத் திருப்பி, படத்தில் காட்டியபடி விரித்து அகலப்படுத்திக்கொள்ளவும்.

ஸ்டெப் 2:

ஹேர்பேண்டின் நடுப்பகுதியில் நூலால் இறுக்கமாகக் கட்டுங்கள். தலைப்பகுதியையும் உடல் பகுதியையும் பிரித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3:

தலைப்பகுதியின் இரண்டு ஓரங்களிலும் ஹேர்பேண்டை சிறிய பந்துபோல எடுத்து, இறுக்கமாகப் பிடித்து நூலால் கட்டுங்கள். உருவத்தின் காதுகள் தயார்.

க்யூட் கீ செயின்

ஸ்டெப் 4:

இப்போது ஹேர்பேண்டின் கீழ்ப்பகுதியிலும் நூலால் கட்டி கால்கள் உருவாக்கவும். பொம்மையின் முழு உருவம் தயார்.

ஸ்டெப் 5:

ஸ்டிக்கர் பொட்டு அல்லது கூக்ளிஐ பயன்படுத்தி கண்களை ஒட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் 6:

பொம்மையின் மேற்புறம் கீசெயின் வளையத்தை மாட்டவும்.

ஸ்டெப் 7:

டெக்ரெட்டிவ் ரிப்பன் பயன்படுத்தி கழுத்துப் பகுதியை அழகுபடுத்தினால் க்யூட் கீசெயின் தயார்.

க்யூட் கீ செயின்

இதேபோன்று உங்களுக்குப் பிடித்த நிறத்தில் பிடித்த பொம்மைகளைச் செய்து அசத்துங்கள்!