'' 'டோக்கன் சிஸ்டம்’ என்ற முறையால் மணல் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஊருக்கு ஊர்... தெருவுக்குத் தெரு.. ரவுடிகளும் ஊர்க்காரர்களும் ஆளும் கட்சிக்காரர்களும் டோக்கன்களுடன் அலைகிறார்கள். இவர்கள், ரகசியமாக குவாரிக்காரர்களிடமிருந்து டோக்கன்களை வாங்கி வைத்துள்ளனர். மணல் அள்ளப் போகும் லாரி ஓட்டுநர்கள், இவர்கள் அனைவருக்கும் வரிசையாகக் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது. கப்பம் கட்டாமல், எங்களால் குவாரிகளுக்குள் நுழையவே முடியவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு, மணல் பிசினஸை ஆறுமுகசாமி நடத்தினார். இப்போது புதுக்கோட்டை ராமச்சந்திரன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர், பொதுப்பணித் துறை அமைச்சரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர். தற்போதைய அ.தி.மு.கவின் நால்வர் அணிதான் மணல் பிசினஸ் விவகாரங்களைக் கண்காணிக்கிறது. ஆறுமுகசாமி காலத்தில் மணல் லாரிகள் தரப்பில் வெளியாட்களுக்கு நாங்கள் அதிகம் கப்பம் கட்டியதில்லை. இப்போது அப்படி இல்லை. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற பிறகு, அரசியல்வாதிகள்... குறிப்பாக, உள்ளூர்காரர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. நாங்கள் அதிகம் கப்பம்கட்ட வேண்டியிருக்கிறது'' என்று நம்மிடம் குமுறினார், தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ்.

உள்ளூர் ரவுடிகளும் அரசியல்வாதிகளும்!

மணல் பிசினஸுக்கு சம்பந்தமே இல்லாத உள்ளூர் ரவுடிகள் தொடங்கி உயர்மட்ட அரசியல்வாதிகள் வரை, மணலை வைத்து அடிக்கும் கொள்ளைகள் ஏராளம். அதற்கு உதாரணம்தான், டோக்கன் சிஸ்டம். மணல் பிசினஸில் நடக்கும் அண்டர்கிரவுண்டு பாலிடிக்ஸ் குறித்து அவர் பல அதிர்ச்சித் தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு பக்கம் உள்ள பூண்டி, சாத்தம்பாக்கம் குவாரிகளுக்கு அருகில் அரசியல் பிரமுகர் ஒருவர் அடாவடி வசூலில் இறங்கியிருக்கிறார். அங்கே, ஒரு நாளைக்கு 1,500 லாரிகள் மணல் ஏற்றுகின்றன. ஒவ்வொரு லாரிகளும் தலா ஆயிரம் ரூபாய் கப்பம் கட்டினால்தான், குவாரிக்குள் நுழைய முடிகிறது. அந்தப் பிரமுகர் ஊர்க்காரர்களிடம், 'கோயில் கட்டுகிறோம், விளையாட்டுப்போட்டி நடத்துகிறோம்’ என்று ஏதாவது காரணங்களைச் சொல்லி, 'மணல் குவாரிக்காரர்களிடம் டோக்கன்களை வாங்கிவைத்து மணல் லாரிக்காரர்களிடம் வசூல் செய்யுங்கள்’ என்று தூண்டிவிடுகிறார். இதுபோன்ற அடாவடிகளைப் பற்றி யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.

ஒரு நாளைக்கு 10,000 லோடு மணல் சென்னைக்குத் தேவைப்படுகிறது. ஆனால், 5,000 லோடுகள்தான் சப்ளை ஆகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் மணல் தட்டுப்பாடு. அப்போது ஒரு லோடு (5 யூனிட்) ரூ.45,000 வரை விற்றது. தற்்போது தட்டுப்பாடு எதுவுமில்லை. ஆனால், ஒரு லோடு ரூ.23,000 வரை விற்கிறது. இதுவே அதிக விலைதான். இதற்கு நாங்கள்தான் காரணம் என்பதுபோல சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. தமிழக அரசுதான் முக்கியக் காரணம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளுதல் அறவே நின்றுபோனது. அங்கே சில குவாரிகளில் ஒப்பந்தக்காரர் விதிமுறைகளை மீறி மலைபோல மணலைக் குவித்துவைத்து வியாபாரம் செய்தார். அதனால், மாவட்டம் முழுவதும் மணல் அள்ள தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துவிட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சத்தமே இல்லாமல் பணியில் சேர்ந்துவிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள முடியாமல் போனதால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மணல் லாரி உரிமையாளர்கள் மட்டும்தான்.''

கூடுதல் விலைக்குக் காரணம்!

''காஞ்சிபுரத்தில் தடை இருப்பதால், சென்னையைச் சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களுக்குப் போய் மணல் அள்ளவேண்டிய சூழ்நிலை. இந்த மாவட்டங்களில் 16 மணல் குவாரிகள் இருப்பதாக அதிகாரிகள் கணக்குச் சொல்கிறார்கள். ஆனால் திருவள்ளூர், விருத்தாசலம், வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு ஆகிய மூன்று இடங்களில்தான் குவாரிகள் முழுவதுமாக செயல்படுகின்றன. விழுப்புரத்தில் இயங்கிவந்த குவாரி சில பிரச்னைகளால் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இரண்டு நாட்கள் காத்திருந்து ஒரு லோடு மணலை பெறும் அவலநிலை உள்ளது. பல கி.மீ. தூரம் போய் அள்ளி வருவதால் கூடுதல் செலவாகிறது. அதைக் கணக்கிட்டால், விலையேற்றத்துக்கான காரணம் புரியும். தேசிய பர்மிட் உள்ள லாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மணலை ஏற்றி அனுப்புகிறார்கள். நம்மவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். தி.மு.க ஆட்சியின்போது, வெளி மாநிலங்களுக்கு மணலை கடத்துகிறவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்கள். அன்று முதல் இன்று வரை யார் மீதும் அந்தச் சட்டம் பாய்ந்ததாகத் தெரியவில்லை. இந்தக் காரணங்களால் சென்னையில் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது.

16 குவாரிகள் இருந்தாலும் மூன்றில்தான் மணல் எடுக்கப்படுகிறது. மற்றவைகளில் மணல் எடுக்க முடியாமல் இருப்பதற்கு ஏதோ மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதிக்குக் காத்திருப்பதாக தமிழக அரசின் அதிகாரிகள் சொல்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்று தெரியவில்லை?' என்றார் யுவராஜ்.

சட்டம் என்ன சொல்கிறது?

ஆறுகளில் மணல் அள்ளுவதுகுறித்து சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கல், ஆற்று மணல், தாது மணல், கனிம வளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி 1957-ம் ஆண்டு இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, இந்தியாவில் ஆற்றுமணல் அள்ளுவதற்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில், இரண்டு வகையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. ஒன்று, தனியார் நிலங்களில் உள்ள மணலை தனியார் அள்ளி விற்பது, அல்லது அள்ளிப் பயன்படுத்துவது. மற்றொன்று, அரசாங்கம் மணலை அள்ளுவது அல்லது அரசு அனுமதியுடன் மணலை அள்ளுவது.

ஒரு வருவாய் கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள மணலை, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் அனுமதியோடு, தோண்டியெடுத்து அந்தக் கிராமத்தின் கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னொரு வருவாய் கிராமத்துக்கும் அந்த மணலை விற்பனை செய்யலாம். ஆனால், இவை எல்லாம் அந்த வட்டத்துக்குள் மட்டும்தான். வெளிமாநிலத்துக்கோ, வேறு நகரங்களுக்கோ ஒரு தனியார் தன் நிலத்தில் உள்ள மணலை அள்ளி விற்க முடியாது. மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்குவதும் அந்த அனுமதியின்படி மணல் அள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் பணி. ஒருவேளை, தனியாரின் நிலம் ஆற்றுப் படுகையில் இருந்தால், அந்த இடத்தில் அவர் மணல் எடுப்பதற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் அனுமதி கொடுக்கமாட்டார்.

வெளிமாநிலங்களுக்கு விற்க முடியாது!

அரசாங்க நிலங்களில் மணல் அள்ளுவதற்கு மாநில அரசாங்கத்துக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. (அவர்கள் அந்த அனுமதியை தனியாருக்கு உள் குத்தகைக்கு விட்டுவிடுகின்றனர். தற்போதைய பிரச்னைகள் அனைத்துக்கும் அதுதான் காரணம்). ஆனால், அரசாங்கம் மணல் அள்ளினால்கூட அதை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்குத் தடை உள்ளது. அரசாங்கம் நினைத்தாலும்கூட மணலை வெளிமாநிலங்களுக்கு விற்க முடியாது. அதுபோல், அரசாங்கம் அள்ளும் மணலை தனியார் ஒருவர் மொத்தமாக வாங்கி இருப்பு வைக்கவோ, பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது என்றும் சட்ட விதிமுறை உள்ளது.

இவ்வளவு சட்டங்கள் இருந்தும் மணல் கொள்ளை தொடர்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? அடுத்த இதழில்...

‘எமன்’ லாரிகள்!

மணல் லாரிகள் இயக்கப்படும் சாலைகளில் நடந்து செல்பவர்களும் பைக் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள். மணல் லாரிகளால் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன.

கடந்த மாதம் 19-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தென்குச்சிப்பாளையம் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. காலை நேரத்திலும் போதையில் இருந்தார், லாரி ஓட்டுநர். கொளத்தூர் என்ற கிராமத்தைக் கடக்கும் வேளையில் இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது லாரி மோதியது. அந்த இரு சக்கர வகனத்தில் சென்ற சுரேஷ் மற்றும் அவரது 5 வயது மகன் ரவீந்திரநாத் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டனர். தந்தையுடன் மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் சென்ற ரவீந்திரநாத் என்ற குழந்தை பிணமானான்.

கடலூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி, 'என் மகன் விமல்குமார் சொந்தமாக காய்கறி கடை வச்சிருந்தான். அவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்காங்க. மதிய சாப்பாட்டுக்கு பைக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தப்போ, அவனுக்குப் பின்னால் வேகமா வந்த மணல் லாரி மோதிருச்சு. லாரி சக்கரம் தலையில ஏறிடுச்சு. தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே இறந்துட்டான். இப்போ எங்க குடும்பம்தான் நடுத்தெருவுல நிக்குது'' என்று கதறினார்.

மணல் கடத்துபவர்கள் யார்?

''சென்னைக்கு மணல் தேவைக்காக திருச்சி பக்கமாகப் போனால், அவர்கள் உடனே மணல் தருவதில்லை. ஓசூர் ரிஜிஸ்ட்ரேஷன் லாரிகளுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள். திருச்சி நத்தம் குவாரி மற்றும் நாமக்கல் மோகனூர் மணல் குவாரி ஆகியவற்றில் இருந்து டி.என் 70, டி.என் 28 என்ற பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் கர்நாடகா வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மணல் ஏற்றுகிறார்கள. அனைத்து மணல் குவாரிகளும் அரசு ஆணைப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அதன் பர்மிட்டை ரத்து செய்யவேண்டும். தேசிய பர்மிட் மற்றும் பார்சல் வேன்களில் திருட்டுத்தனமாக மணலை ஏற்றி வெளிமாநிலங்களுக்குக் கடத்துகிறவர்களுக்கு மணல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடவேண்டும். இதையெல்லாம் தமிழக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம்'' என்கிறார் எஸ்.யுவராஜ்.