'காக்க காக்க’ படத்தில் வரும் ஜோதிகாபோல அழகான டீச்சர் கவிதா. கோவை மாவட்டமும் கேரள மாநிலமும் முட்டிக்கொள்ளும் ஏரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். கவிதாவின் முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாசப்படமாக நெட்டில் வெளிவர... பள்ளிக்கூடமே அதிர்ந்தது. விஷயம் கேள்விப்பட்டு மயங்கிச் சரிந்தார் கவிதா. உடனடியாக பள்ளிக்கூடத்தின் சார்பில் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தாமதாமகிக்கொண்டே இருந்தது. கவிதா குடும்பத்தினர் டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை நாடினர். அவர்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, எந்த கம்ப்யூட்டரில் இருந்து படம் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற ஐ.பி எண்ணைக் கண்டுபிடித்தனர். அந்த ஐ.பி எண்ணுக்குரிய முகவரியைப் பார்த்தால், பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் வீடு அது. அந்தக் குடும்ப உறுப்பினர்களின் படத்தை சேகரித்து கவிதாவிடம் காட்டினார்கள். அதைப்பார்த்து கவிதா அதிர்ந்துபோனார். அந்தப் படத்தில் இருந்த பையன் கவிதாவிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்விக். மறுநாள் பள்ளிக்கு வந்த ரித்விக்கிடம் தலைமை ஆசிரியர் அறையில் விசாரணை நடந்தது. 'மிஸ் திட்டிட்டே இருந்தாங்க. அதனால சும்மா விளையாட்டுக்காக செஞ்சேன்!’ என்று கேஷுவலாக சொல்லியிருக்கிறான் ரித்விக்.

ரித்விக் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போன் பறந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். 'தினமும் ஸ்கூல் விட்டு வந்ததுல இருந்து கம்ப்யூட்டர்லதான் இருப்பான். இவ்வளவு சின்ன வயசிலயே போட்டோஷாப்ல நல்லா ஒர்க் பண்றான்னு சந்தோசப்பட்டோம். இப்படி ஒரு தப்பு செய்வான்னு நாங்க நெனைச்சுப் பார்க்கவே இல்லை. மன்னிச்சு விட்டுருங்க...'' என்று கதறியழுதார் அவனது அம்மா. ஆனாலும் பள்ளி நிர்வாகம் அவனுக்கு டி.சி கொடுத்து அனுப்பிவிட்டது. கவிதா டீச்சர் அந்த விஷயத்தில் இருந்து மீண்டு வெளியில் வர பல மாதங்கள் ஆனது.

நம் குழந்தைகள் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதே நேரத்தில் அவர்களுக்கு நம்முடைய கண்காணிப்பும் மிகவும் அவசியம் என்பதை பல பெற்றோர்கள் உணருவதில்லை. கம்ப்யூட்டர் வைத்திருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்!

'கொய்யாப்பழம் வாங்கித்தர்றேன் வா...!’

சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் என்று தொடங்கி துணிக்கடையில் பில் போடுபவர்கள் வரை கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்கள். இவர்களைவிட அதிகமாக பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பதின்பருவ வயதினர்தான் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அறியாத வயதில் ஏற்படும் குழப்பங்களுக்கான தீர்வை நெட்டில் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். அங்கே நல்லது சொல்லித் தரும் அளவுக்கு கெட்ட விஷயங்களைச் சொல்லித் தரும் இணையங்களும் இணையாக உள்ளன.

பாலியல் வக்கிரங்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மூளையில் செலுத்துகிற இணையதளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில், 'பர்வெர்ட் போர்னோ வெப்சைட்கள்’ தனிரகம். ஒரு பெண்ணை கட்டிப்போட்டு, சித்ரவதை செய்து, அந்தப் பெண்ணின் பாலியல் உறுப்புகளை சிதைத்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற வீடியோ தொகுப்புகள் அதில் ஏராளமாக உள்ளன. அதுபோன்ற இணையதளங்களை 11ம் வகுப்பு படிக்கும் தனது அண்ணனின் லேப்டாப்பில் அடிக்கடி பார்த்ததால் ஏற்பட்ட வக்கிர புத்தியில்தான் 6ம் வகுப்பு மாணவி கீர்த்திகாவை கொடூரமான முறையில் கொலை செய்தான், ஒரு மாணவன்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் வசிக்கும் கீர்த்திகாவுக்கு 11 வயது. 6-ம் வகுப்பு மாணவி. பக்கத்து வீட்டுப் பையன் ஹரி, 10-ம் வகுப்பு மாணவன். அண்டை வீட்டுக்காரர்கள் என்பதால் சேர்ந்து படிப்பது, சேர்ந்து விளையாடுவது என்று பழகி வந்தனர். ஹரி ஒரு நாள் வகுப்பறையில் தவறு செய்துள்ளான். அதற்காக அவனை பள்ளி மைதானத்தில் மண்டியிடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஆனால், ஆசிரியர் சொன்னபடி மண்டியிடாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து நைஸாக நழுவினான். அப்போது பள்ளிக்கூடம் விட்டு வந்துகொண்டிருந்த கீர்த்திகாவை, கொய்யாப்பழம் வாங்கித் தருவதாகச் சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றான்.

'நாம் ரெண்டுபேரும் கை கால்களை கட்டி விளையாடலாம். முதலில் நான் உன் கை, கால்களை கட்டுகிறேன்’ என்று சொல்லி, கீர்த்திகாவின் தலையில் இருந்த ரிப்பனை அவிழ்த்து, கீர்த்திகாவின் கை கால்களை கட்டினான். அதன்பிறகு, ஆடைகளைக் களைந்து, அவளுடைய பிறப்புறுப்பை பேனாவால் காயப்படுத்தி உள்ளான். கீர்த்திகா கத்தி கலாட்டா செய்தாள். பயந்துபோன ஹரி, பக்கத்தில் கிடந்த பாட்டிலை எடுத்து அவள் தலையில் தாக்கினான். மார்புப் பகுதிகளையும் கிழித்து காயப்படுத்தி உள்ளான். கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தாள். பிறகு வீட்டுக்கு ஓடிவந்து ரத்தக்கறை படிந்த சட்டையை தூக்கிவீசிவிட்டு, வேறு சட்டையை அணிந்துகொண்டு பள்ளிக்கூட வகுப்பறையில் போய் சத்தமில்லாமல் உட்கார்ந்துகொண்டான். சிறுமி கீர்த்திகா கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக்கிடக்கும் துயரச் செய்தி ஊர் முழுக்கப் பரவியது. ஊரே கொந்தளித்தது. குற்றவாளியை உடனடியாகக் கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கு நெருக்கடி அதிகரித்தது. சில இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மீது போலீஸின் சந்தேகப் பார்வை விழுந்தது. கீர்த்திகாவும் ஹரியும் சென்றதைப் பார்த்ததாக ஒருவர் போலீஸ் விசாரணையில் சொன்னார். போலீஸார் வந்தபோது, வீட்டில் ஹரி இல்லை. உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளான் என்று அவனது பெற்றோர் சொல்ல... அவனை வெளியூரில் இருந்து போலீஸ் தூக்கிவந்தது. போலீஸ் அதட்ட... எல்லா உண்மைகளையும் கக்கினான். கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

'தோழியின் அம்மா!’

சென்னையில் கோடீஸ்வரர் குடும்பத்துப் பிள்ளைகள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளிக்கூடம். ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகளை காலையில் பள்ளிக்கூடத்துக்கு காரில் அழைத்து வருவதும், மாலையில் அழைத்துச் செல்வதும் அர்ச்சனாவின் அன்றாட வேலை. ஒருநாள் அர்ச்சனாவின் செல்போனுக்கு ஒரு லேண்ட் லைன் நம்பரில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. 'இன்னைக்கி நீங்க சிவப்புக் கலர் சேலையில ரொம்ப அழகா இருந்தீங்க. உங்க பிளவுஸுக்கு மேச்சா லிப்ஸ்டிக் போட்டிருந்தது அழகா இருந்துச்சு...' என்று எதிர்முனையில் வழிந்தது ஒரு குரல். ஒரு சிறுவனுக்குரிய குரலாக அது இருந்தது. கோபமடைந்த அர்ச்சனா, கண்டபடி திட்டிவிட்டு, 'யாருடா நீ?’ என்று கேட்டுள்ளார். எதிர்முனையில் பதில் இல்லை. பின்னர், ஒவ்வொரு நாளும் அதேபோன்ற அழைப்புகள் அர்ச்சனாவுக்கு வர ஆரம்பித்தன. வேறுவேறு லேண்ட் லைன் நம்பர்கள், ஆனால், குரல் மட்டும் ஒரே நபருடையது. அர்ச்சனா பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தமக்கு வந்த அனைத்து லேண்ட் லைன் நம்பர்களையும் குறிப்பிட்டு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார் அர்ச்சனா. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த லேண்ட் லைன் நம்பர்கள் அனைத்தும் பப்ளிக் டெலிபோன் பூத்தாக இருந்தன. எனவே, 'நீங்கள் கொஞ்சம் நல்லவிதமாகப் பேசி, அவனுடைய பெர்சனல் நம்பரை வாங்குங்கள்’ என்று போலீஸார் யோசனை சொன்னார்கள். அதன்படியே பேசினார் அர்ச்சனா. அவனுடைய செல்போன் நம்பர் கிடைத்துவிட்டது. அந்த நம்பருக்கு பேச முயன்றால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

அவன் சாதாரண ரக செல்போன் கருவியை பயன்படுத்தியதால், ஜி.பி.எஸ்., ஐ.எம்.இ என எதை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, ஒரு விளம்பர நிறுவனத்தின் அட்வர்டைஸ்மென்ட் தகவலைப் போல ஒரு குறுஞ்செய்தியை போலீஸார் அனுப்பினர். 'டெலிவர்டு' என்று மறுநாள் காலையில் ரிப்ளை வந்தது. மெசேஜ் டெலிவரியான டவர் லொகேஷனை உடனே கண்டுபிடித்தனர். செல்போன் நிறுவனத்திடம் இருந்து தேவையான தகவல்கள் சிலவற்றை வாங்கிய போலீஸார் சில நிமிடங்களில் குற்றவாளியைப் பிடித்துவிட்டனர்.

அவன் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பதை அறிந்து போலீஸாரே அதிர்ந்துபோயினர். '' 'கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மம்’ (தோழிகளின் தாய்) என்ற ஒரு வெப்சைட்டை என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து அடிக்கடி பார்ப்பேன். அந்த ஆன்டி ரொம்ப அழகா இருந்ததால அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. தினமும் அவங்க ஸ்கூலுக்கு வரும்போது, அவங்களைப் பார்த்து ரசிப்பேன். அவங்களோட செல்போன் நம்பரை ஸ்கூல் அட்மின் ஆபீஸ்ல இருந்து தெரியாம எடுத்தேன். அதை வெச்சுத்தான் அவங்களுக்கு அடிக்கடி போன் பண்ணினேன்' என்று அதிரவைத்தான் அந்த மாணவன்.

அறைக்குள் அடங்கிய கனவு!

சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் சுருதி. மாடலிங் துறையில் பிரபலமடைய வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம். எப்போது பார்த்தாலும் இன்டர்நெட்டிலேயே உட்கார்ந்திருப்பார். லேட்டஸ்டாக வந்துள்ள அழகுசாதனப் பொருட்கள், நவீன உடைகள், மாடலிங் தொடர்பான டிப்ஸ் என அவரது தேடல்கள் அனைத்தும் மாடலிங் பற்றியதாகவே இருக்கும். ஒரு நாள் சுருதிக்கு ஒரு இமெயில் வந்தது. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 'மிஸ் சென்னை’ போட்டி நடைபெற இருப்பதாக இணையதளத்தில் ஒரு அறிவிப்பைக் கண்டார் சுருதி. அதுதொடர்பான விவரங்களைத் தேடினாள். பெயர், வயது, தலைமுடியின் நிறம், கண்களின் நிறம், மார்பகங்களின் அளவு, இடை அளவு என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை விவரங்களையும் கேட்டிருந்தனர். நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள், இரவு உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள், உள்ளாடைகள் அணிந்து எடுத்த புகைப்படங்கள் முதலியனவற்றையும் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.

'முதற்கட்டத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்’ என்றும் சுருதிக்கு மெயில் வந்தது. அவர்கள் வரச்சொல்லியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு தன் தோழியுடன் சென்றார் சுருதி. அங்கே அவரைப்போலவே ஏராளமான அழகுப் பெண்கள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அரைகுறை ஆடைகளுடன் 'கேட்வாக்’, 'ஸ்விம் வாக்’ போகச் சொல்லி நிறைய புகைப்படங்களை எடுத்தனர். இரண்டாம் கட்டத் தேர்வுக்கு ஹைதராபாத் வரச் சொல்லி உள்ளனர்.

அவர்கள் சொன்ன தேதியில், ஹைதராபாத் சென்றார் சுருதி. அங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தனித்தனியாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. சுருதி அழைக்கப்பட்ட அறைக்குள் இருந்தவர் நடுத்தர வயது ஆண் ஒருவர் மட்டுமே. 'செக்ஸ் விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே மாடலிங் துறையில் பெரிய ஆளாக வரமுடியும். உன்கிட்ட எல்லா அம்சங்களும் இருக்கு. உன்னை பெரிய ஆளாக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று கன்வின்ஸ் செய்திருக்கிறார். அதையடுத்து, அந்த நபரின் பாலியல் இச்சைக்கு பலியானார் இந்த அப்பாவி இளம்பெண். அங்கு சென்றிருந்த பல அழகிகளும் அதே அனுபவத்தை எதிர்கொண்டார்கள் என்பது தனிக்கதை.

'மிஸ் சென்னை’ ஆகப்போகிறோம் என்ற கனவில் சிறகடித்துப் பறந்தார் சுருதி. அதன் அறிவிப்புக்காக அவர்களின் இணையதளத்தை நாள் தவறாமல் பார்த்து வந்தார். ஒருநாள் அந்த இணையதளம் மூடப்பட்டிருந்தது. பதற்றம் அடைந்த சுருதி அவர்களுடைய செல்போன் நம்பர்களுக்குத் தொடர்புகொண்டார். அவை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தன. அதனால் மனம் உடைந்துபோன சுருதியின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றங்களை வைத்து அவரது பெற்றோர் சந்தேகப்பட்டனர். தான் ஏமாற்றப்பட்ட கதையை அவர்களிடம் சொல்லி கதறினார் சுருதி.

போலீஸுக்குப் போனால் விவகாரம் வெளியே கசிந்து குடும்ப மானம் போய்விடும் என்று கருதிய சுருதியின் பெற்றோர், சைபர் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற தனியார் டிடெக்டிவ் நிறுவனத்தை நாடினர். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த இணையதளத்தின் சர்வர் அயர்லாந்தில் இருந்து இயக்கப்படுவது தெரிய வந்தது. எனவே, அதற்குமேல் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த பாதிப்பில் இருந்து சுருதியை மீட்பதற்கு ஓராண்டுக்கு மேலாக மனநல மருத்துவரின் கவுன்சலிங் தேவைப்பட்டது. அவரது கல்லூரி படிப்பும் இரண்டாண்டுகள் தடைப்பட்டது.

கண்காணிப்பு கேமராக்கள் மலிவாகிவிட்டன. சுற்றுலாத்தலங்களில் உள்ள தங்கும் விடுதிகள், துணிக்கடைகளில் ஆடைகள் மாற்றுவதற்காக அறைகள் உட்பட பொது இடங்களில் எச்சரிக்கையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அடுத்த இதழில்...