Published:Updated:

‘‘தயாதேவதாஸ் திசை திருப்புகிறார்!”

‘‘தயாதேவதாஸ் திசை திருப்புகிறார்!”

‘‘தயாதேவதாஸ் திசை திருப்புகிறார்!”

‘‘தயாதேவதாஸ் திசை திருப்புகிறார்!”

Published:Updated:

‘கிரானைட் அடுத்து கார்னட்...’ என்ற தலைப்பில் கடந்த 25.03.15 தேதியிட்ட இதழில் கார்னெட் மணல் முறைகேடு பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு பற்றிய செய்தியை வெளியிட்டு இருந்தோம். அதுதொடர்பாக ‘சதர்ன் ரீஜன் மைன்ஸ் அண்டு மினரல்ஸ் பேஸ்டு ஒர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன்’ என்ற அமைப்பின் சார்பில் ஆர்.பாலகிருஷ்ணன் என்பவர் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

‘‘தயாதேவதாஸ் திசை திருப்புகிறார்!”

அதில், ‘‘தங்கள் கட்டுரையில்  தாது மணல் அதிபர் சங்க தலைவர் தயாதேவதாஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேற்படி சங்க தலைவர் அல்ல. மாறாக, ‘ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் பிளேசர் மினரல் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் ஒரு கம்பெனியைப் பதிவு செய்து, அதை ஒரு ஃபெடரேசன் என நம்பச் செய்து தலைவர் என அவருக்கு அவரே பெயர் சூட்டிக்கொண்டார். இதில் உள்ள ஒரே குத்தகைதாரர் தயாதேவதாஸ் மட்டுமே. தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் தவிர, இதர அனைத்து தனியார் நிறுவனங்களும் சேர்ந்து ‘பீச் மினரல் புரொட்யூசர்ஸ் அசோசியேசன்’ என்ற அமைப்பை வைத்துள்ளன. இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள விக்டர் ராஜமாணிக்கம், ஓர் ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர், தயாதேவதாஸிடம் பணியாற்றுகிறார். மீடியாவையும் அரசையும் நீதிமன்றத்தையும் வி.வி.மினரலுக்கு எதிராகத் திருப்புவதுதான் இவர்களின் வேலை. இவர்களது புகார்கள் உள்நோக்கம்கொண்டவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பு தி.மு.க ஆட்சி இருந்தபோது தலைமையின் சொல்படி, அப்போது சேரன்மாதேவி சப்-கலெக்டராக இருந்த ககந்தீப் சிங் பேடி,
வி.வி.மினரல் நிறுவனத்தைத் தொந்தரவு செய்தார். பொறுக்க முடியாத நிலையில், அவர்மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனித உரிமை ஆணையத்திலும் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதைக் கோபமாக வைத்து கன்னியாகுமரி கலெக்டராக அவர் இருந்தபோது, வி.வி.மினரல் தங்களது சொந்த நிலத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்ய மறுத்தார். உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுத்தான் விண்ணப்பமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. இவ்வளவு விரோதம் உள்ள ஒரு நபரிடம் தற்போது விசாரணை கொடுக்கப்பட்டால், முடிவு எப்படி இருக்கும்?

தயாதேவதாஸுக்கும் வைகுண்டராஜனுக்கும் இடையே உள்ள பகை என்பது 1989-ல் இருந்து தொடர்கிறது. அவருடைய வேலையே, தனது சட்ட விரோதப் பணியை மறைக்க அடுத்தவர் மீது கவனத்தைத் திருப்புவதுதான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism