Published:Updated:

மும்பைத் தாக்குதலுக்கு உளவு அமைப்புகளின் தோல்வியே காரணம்: பாகிஸ்தான்

மும்பைத் தாக்குதலுக்கு உளவு அமைப்புகளின் தோல்வியே காரணம்: பாகிஸ்தான்
மும்பைத் தாக்குதலுக்கு உளவு அமைப்புகளின் தோல்வியே காரணம்: பாகிஸ்தான்

மும்பைத் தாக்குதலுக்கு உளவு அமைப்புகளின் தோல்வியே காரணம்: பாகிஸ்தான்

புதுடெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதில் இந்திய உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்த ரஹ்மான் மாலிக், டெல்லியில் உள்ள அப்சர்வர் ஆய்வு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில்," பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அல்-கொய்தா பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரியுடனும், அபு ஜிண்டால், ஜபியுல்லா, பாஹிம் அன்சாரி ஆகிய மூன்று இந்திய பயங்கரவாதிகளுடனும் இணைந்து மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டினார். அவர்கள் இதற்காக இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளனர்.

எனவே, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது அரசு ஆதரவு பெற்ற நடவடிக்கை அல்ல.இது எந்த அரசையும் அல்லது நாட்டையும் சாராத சில தனிநபர்களின் செயலாகும்.ஹெட்லி, பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகி லஷ்கர் அமைப்பில் சேர்ந்தவரான இலியாஸ் காஷ்மீரி,மூன்று இந்திய பயங்கரவாதிகள் என்ற மூவர் குழுக் கூட்டணியின் நாசவேலைதான் இது.

புலனாய்வு அமைப்புகள் தோல்வி

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், அவர்கள் முக்கிய இலக்குகளை வேவு பார்த்ததும், எவ்விதத் தடங்கலும் இல்லாமல், சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குத் தெரியாமல் இலக்குகளைப் படம் பிடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இந்த விவரங்களை ஒன்றுபடுத்திப் பார்த்தால், மூன்று பேர் இத்தாக்குதல் தொடர்பாக தீவிரமாகச் செயல்பட்டது புரியும்.

அவர்களில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் தாக்குதல் சதித்திட்டத்துக்கான பணத்தை வழங்கியுள்ளார். அவர் கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு பல இடங்களிலும் சுற்றித் திரிந்து ஒரு அமைப்பு போல் உருவாக்கியுள்ளார். இவை அனைத்தும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த விஷயத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் தோல்வியடைந்தன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது.

##~~##
இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் அவ்வப்போது தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால் மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். பயங்கரவாதம் மற்றும் புலனாய்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்புடைய தகவல்களை இந்தியா எங்களிடம் மறைக்கக் கூடாது. அப்படி தகவல்கள் மறைக்கப்பட்டால், விஷயங்கள் கை மீறிப் போய்விடும்
எனவே, நம்மிடையே அமைச்சர்கள் நிலையிலும், அரசுகள் நிலையிலும் ஒருங்கிணைப்பு இருந்தால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உருவாகும்" என்றார் மாலிக்.

இந்தியா மறுப்பு

இதனிடையே மும்பை பயங்கரவாதத் தாக்குதலை இந்திய உளவு அமைப்புகளால் தடுத்திருக்க முடியும் என்று ரஹ்மான் மாலிக் கூறியுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,  "மும்பைத் தாக்குதல், பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவாகி, திட்டமிடப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட்டது என்பதே முக்கிய விஷயமாகும். இந்த சதித்திட்டத்தை உருவாக்கி, அமல்படுத்தப்பட்டபோது இந்த பயங்கரவாதச் சக்திகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மும்பைத் தாக்குதல் நடைபெற்ற பிறகும், இந்த விவகாரம் குறித்த முழு உண்மைகளும் உலகுக்கே தெரிந்தபோதிலும் முக்கிய சதிகாரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வருகிறது'" என்று தெரிவிக்கப்பட்டுள்து.


 

அடுத்த கட்டுரைக்கு