Election bannerElection banner
Published:Updated:

`ஆபரேஷன் ஸ்மைல்’: தேனியில் இரண்டே நாள்களில் 12 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்
கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்

`ஆபரேஷன் ஸ்மைல்’ எனப்படும் குழந்தைகள்நல விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, இரண்டு நாள்களில் 12 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்தல், காணாமல்போன குழந்தைகளைக் கண்டறிதல் போன்ற குழந்தைகள் நலன் சார்ந்த செயல்பாடுகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, ஆபரேஷன் ஸ்மைல் (புன்னகையைத் தேடி) என்ற நிகழ்வு தேனியில் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட குழந்தைகள்நலக்குழுவும், காவல்துறையும் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறியும் ஆய்வில் இறங்கினர். முதற்கட்டமாக போடி பகுதியிலுள்ள கடைகள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர் மழை... பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான பயிர்கள்... கண்ணீரில் தேனி விவசாயிகள்!
கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள் நலக் குழுவினர்
கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள் நலக் குழுவினர்

போடியில், கடைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில், இரண்டு சிறுவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதால், அவர்களைப் பணியமர்த்திய கடை உரிமையாளர்களைக் கடுமையாக எச்சரித்த மாவட்ட குழந்தைகள்நலக் குழுவினர், அந்தச் சிறுவர்கள் தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடுசெய்வதாக உறுதியளித்தனர். அதேவேளையில், மீட்கப்பட்ட மூன்று சிறுவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களைப் பணியமர்த்திய கடை உரிமையாளர்கள்மீது போடி மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள்நலக் குழு சார்பில் புகார் செய்யப்பட்டது.

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்
கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்
சாக்கலூத்து மெட்டு காப்புக் காட்டுப் பகுதியில் சாலை - என்ன நடக்கிறது தேனி வனப்பகுதியில்?

இரண்டாவது நாள் கள ஆய்வு நேற்று (02-02-2021) சின்னமனூர் பகுதியில் நடந்தது. அப்போது, 17 வயதுடைய சிறுமி ஒருவர் பலசரக்குக் கடையில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளரை எச்சரித்த குழந்தைகள்நலக் குழுவினர், சிறுமியை மீட்டனர். மேலும், கனரகத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களைப் பணியமர்த்திய கடை உரிமையாளர்கள்மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்
கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள்நலக் குழுவினர்

ஆய்வில் இறங்கிய இரண்டு நாள்களில் 12 சிறுவர்கள் மீட்கப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட குழந்தைகள்நலக் குழுவும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, சிறுவர், சிறுமியர்கள் கடைகளில் பணியமர்த்தப்படுவதையும், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைவைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு