Published:Updated:

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்
பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்
பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பாலியல் புகார் கொடுக்க சென்ற இளம்பெண்ணை நடுரோட்டில் காவல்துறையினர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸ் அருகே தாரன் தாரன் என்ற இடத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேன் ஓட்டுநர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தனது தந்தையுடன் இளம்பெண் சென்றுள்ளார். ஆனால் அப்பெண் அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

மேலும், வேன் ஓட்டுநரிடம் காவல்துறையினர் பணம் வாங்கிக் கொண்டு இளம்பெண்ணையும், அவரது தந்தையும் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 4 காவலர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த கீழ்த்தரமான செயல் நாடு முழுவதும் கடும் கண்டன அலையை ஏற்படுத்தியுள்ளது.