Published:Updated:

உ.பி: சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து அடுத்தடுத்து சென்ற 13 டிராக்டர்கள் - அதிரவைக்கும் மணல் மாஃபியா

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர்கள் ( twitter )

உத்தரப்பிரதேசத்தில் நேற்றிரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 மணல் மாஃபியா டிராக்டர்கள், சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துச் சென்ற சம்பவம் போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா முழுவதுமே, உரிய அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளப்படுவது சட்டப்படி தண்டனைக்குரியச் செயல். இருப்பினும், மாஃபியா குழுக்கள் மூலம் ஆங்காங்கே சட்டவிரோதமாக ஆற்றுமணல் சூறையாடப்பட்டுவருவதை ஊடகங்கள் வாயிலாக நாமும் பார்த்துத்தான் வருகிறோம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நேற்றிரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 மணல் மாஃபியா டிராக்டர்கள், சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துச் சென்ற சம்பவம் போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்
சித்தரிப்புப் படம்

ஆக்ரா குவாலியர் நெடுஞ்சாலையிலுள்ள ஜஜாவ் சுங்கச்சாவடியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், முதலில் மணல் ஏற்றிவந்த டிராக்டர் ஒன்று, சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தாமல், அங்கிருந்த தடுப்பை உடைந்தெறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து வந்த மற்ற 12 டிராக்டர்களும் தொடர்ச்சியாக வண்டியை நிறுத்தாமல் தடுப்புகளை உடைத்துவிட்டுச் சென்றிருந்தன.

இப்படியாகச் சுங்கச்சாவடி தடுப்புகளை 50 விநாடிகளில், 13 டிராக்டர்கள் உடைத்துச் சென்றிருக்கின்றன. மேலும், டிராக்டர்கள் சுங்கச்சாவடியில் நிற்காமல் தடுப்புகளை உடைத்துச் சென்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதையடுத்து போலீஸாரும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராஜஸ்தான்-உத்தரப்பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சட்டவிரோதச் சுரங்கச் செயல்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.