Published:Updated:

பாலியல் புகார் அளிக்கச் சென்ற பட்டியலினச் சிறுமி; அடைத்துவைத்து பெல்ட்டால் அடித்த காவலர்கள்!

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பட்டியலினச் சிறுமி அங்கு அடைத்துவைக்கப்பட்டு, பெல்ட்டால் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் புகார் அளிக்கச் சென்ற பட்டியலினச் சிறுமி; அடைத்துவைத்து பெல்ட்டால் அடித்த காவலர்கள்!

பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பட்டியலினச் சிறுமி அங்கு அடைத்துவைக்கப்பட்டு, பெல்ட்டால் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

மத்தியப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பட்டியலினச் சிறுமி, அங்கு அடைத்து வைக்கப்பட்டு, பெல்ட்டால் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகஸ்ட் 27-ம் தேதி விளையாடுவதற்காக வெளியே சென்ற தன்னுடைய 14 வயது மகள் வீடு திரும்பவில்லை என்று பெண் ஒருவர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஆகஸ்ட் 30-ம் தேதி வீடு திரும்பிய அந்தச் சிறுமி, பாபு கான் என்பவர் வலுக்கட்டாயமாகத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று மூன்று நாள்கள் அடைத்துவைத்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக சிறுமியுடன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கச் சென்றார். அங்கு காவலர்கள் பாலியல் புகாரளிக்க வந்த தங்களைத் தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கைது
கைது

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ``என்னுடைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது குறித்து புகார் பதிவுசெய்ய நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்றோம். இரண்டு காவலர்கள் என்னுடைய மகளின் வாக்குமூலத்தை மாற்றும்படி அழுத்தம் கொடுத்தனர். மேலும் என்னுடைய மகளை அடித்துத் துன்புறுத்தினார்கள். மற்றொரு போலீஸ் அதிகாரி என்னை வெளியே அழைத்துச் சென்றார். அதன் பிறகு, என்னுடைய மகளை அடைத்துவைத்து எட்டி உதைத்து, பெல்ட்டால் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறேன்’’ என்றார்.

இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடந்ததாக புகார் எழுந்த நிலையில், மூன்று போலீஸ் அதிகாரிகள் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் குற்றவாளியான பாபு கான் செப்டம்பர் 3-ம் தேதி கைதுசெய்யப்பட்பட்டார்.