Published:Updated:

போலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள்! - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

எம்.குமரேசன்
போலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள்! - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
போலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள்! - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ஸாமில் 5 பேரை போலி என்கவுன்டர் செய்த வழக்கில், மேஜர் ஜெனரல் உட்பட 7 ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

1994-ம் ஆண்டு, தின்சுகியா மாவட்டத்தில் அஸ்ஸாம் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பிரபின் சோனாவால், பிரதீப் தத்தா, தபாஜித் பிஸ்வாஸ், அகில் சோனாவால், பாபென் மோரன் ஆகிய  ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 9 பேரை 'உல்பா' தீவிரவாதி என்ற புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துசென்றனர். அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான ஜக்தீஷ் புயான், இந்த மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கௌஹாத்தி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுச் செய்தார். மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. ராணுவம் அவர்களின் சடலங்களை மட்டுமே காட்டியது. அஸ்ஸாமில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலி என்கவுன்டரில் மாணவர்களை ராணுவம் கொலை செய்ததாகப் பெரும் போராட்டம் நடைபெற்றது. 

மேஜர் ஜெனரல் எம்.கே. லால், கர்னல் தாமஸ் மேத்யூ, கர்னல் சிபிரன், கேப்டன் திலீப், கேப்டன் திக்ஜியோ சிங், நாயக் அல்பேந்தர்சிங், நாயக் ஷிவேந்தர் சிங் ஆகியோர் போலி என்கவுன்டரில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. சிபிஐ அளித்த அறிக்கையில், 'கொல்லப்பட்ட 5 பேரும் கொடூரமாகச் சித்ரவதைசெய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. இந்த வழக்கை கௌஹாத்தியில் உள்ள ராணுவ நீதிமன்றம் விசாரித்து, இன்று தண்டனை விவரம் அளிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் எம்.கே. லால் உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கு, 24 ஆண்டு காலம் நடந்துள்ளது.