Published:Updated:

`சிவன் கோயிலில் சிலைகள் திருடுபோகிறது சார்!’ - திருமானூரில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல்

`சிவன் கோயிலில் சிலைகள் திருடுபோகிறது சார்!’ - திருமானூரில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல்
`சிவன் கோயிலில் சிலைகள் திருடுபோகிறது சார்!’ - திருமானூரில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல்

`சிவன் கோயிலில் சிலைகள் திருடுபோகிறது சார்!’ - திருமானூரில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல்

திருமானூர் சிவன் கோயிலில் திடீர் ஆய்வை மேற்கொண்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், ஐம்பொன் சிலைகளை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். பொன்.மாணிக்கவேலின் வருகையால் சிலை திருடர்கள் மட்டுமல்லாமல் அதற்கு உதவி செய்த அதிகாரிகளும் கழகத்தில் இருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று குளிக்கச் சென்ற சிறுவர்கள் ஆற்றின் கரையில் கண்டெடுத்த 4 அடி உயரமுள்ள இரண்டு கற்சிலைகள் திருமானூர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தச் சிவன் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மஞ்சமேடு மற்றும் திருமானூர் சிவன் கோயில் ஐம்பொன் சிலைகள் எனத் தெரிய வந்தது. இந்தச் சிலைகளை ஆய்வு செய்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல், கோயில் சிலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிசிடிவி கேமரா மற்றும் ஆபத்து நேரங்களில் ஒலிக்கக்கூடிய அலாரம் முழு செயல்பாட்டில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோயில் செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். கோயிலின் உள்ளேயும் வெளியேயும் உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், கோயில் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பொன்.மாணிக்கவேல் வருகைக்கு என்ன காரணம் என்று சில அதிகாரிகளிடம் பேசினோம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கற்சிலைகள் மற்றும் உலோக சிலைகள் திருடு போயிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் பொன்.மாணிக்கவேலிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதன் பெயரில் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவர் வருகையால் சிலை திருடர்கள் மட்டுமல்லாமல் கடத்தலுக்கு உதவிய அதிகாரிகளும் கலக்கத்தில் இருக்கிறார்கள்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு