Published:Updated:

ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது சரமாரி தாக்குதல்!

ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது சரமாரி தாக்குதல்!
ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது சரமாரி தாக்குதல்!
ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது சரமாரி தாக்குதல்!

ஜம்மு: ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது நடத்தப்பட்ட சரமாரி தாக்குதலில் அவர் படுகாயத்துடன் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் தீவிரவாதிகள் உட்பட 70 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் சனாவுல்லா ஹக் என்ற பாகிஸ்தானியர் 15 ஆண்டுகளுக்கு மேலாக இச்சிறையில் உள்ளார். இந்நிலையில் இன்று காலை கோட் பல்வால் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சனாவுல்லா ஹக், சக கைதிகளால் தாக்கப்பட்டார். இதனையடுத்து, அவரை சிறை அதிகாரிகள் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

##~~##
முன்னாள் இந்திய ராணுவ வீரரால் தாக்கப்பட்ட சனாவுல்லாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் 'கோமா' நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு, 'கோமா' நிலையில் ஒரு வார காலம் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் நேற்று மரணமடைந்தார். அவர் மீதான  தாக்குதலுக்கு பழிக்குப்பழியாகவே இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுவதால்,அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.