Published:Updated:

நள்ளிரவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு - பாலக்காடு இளைஞர் கைது!

நள்ளிரவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு - பாலக்காடு இளைஞர் கைது!
நள்ளிரவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு - பாலக்காடு இளைஞர் கைது!

கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் மீது நள்ளிரவில் கல் எறிந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணியின் வீடு, கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென்று எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது ஒருவர் கல் வீசியுள்ளார். இதையடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலத்தின் பாலக்காடு அருகே உள்ள கொணச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் என்று தெரியவந்துள்ளது. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

மதுபோதையில் அவர் வேலுமணி வீட்டில் மீது கல் வீசியது தெரியவந்துள்ளது. சிவதாஸ் கல் எறிந்ததில், வேலுமணி வீட்டின் ஜன்னல் உடைந்துள்ளது. இதுதொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.