Published:Updated:

சிபிஐ-யை சிறுமைப்படுத்துவதா?: உச்ச நீதிமன்றம் மீது திக் விஜய் சிங் பாய்ச்சல்!

சிபிஐ-யை  சிறுமைப்படுத்துவதா?: உச்ச நீதிமன்றம் மீது திக் விஜய் சிங் பாய்ச்சல்!
சிபிஐ-யை சிறுமைப்படுத்துவதா?: உச்ச நீதிமன்றம் மீது திக் விஜய் சிங் பாய்ச்சல்!
சிபிஐ-யை  சிறுமைப்படுத்துவதா?: உச்ச நீதிமன்றம் மீது திக் விஜய் சிங் பாய்ச்சல்!

புதுடெல்லி: மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ-யை 'கூண்டுக் கிளி' என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்ததை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில்," பெங்களூரில் உள்ள மத்திய நிர்வாக அமர்வு, தேசிய புலனாய்வு அமைப்பான ஐ.பி.-யை (  Intelligence Bureau- IB) 'கோழி' ( 'சிக்கன்' ) என்று விமர்சித்துள்ளது. அதேப்போன்று மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ-யை 'கூண்டுக்கிளி' என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

நான் இப்பொழுது மக்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன்.மேற்கண்டவாறு  விமர்சிப்பதன் மூலம் நமது புலனாய்வு அமைப்புகளை நாம் சிறுமைப்படுத்துகிறோம்தானே?

நமது புலனாய்வு அமைப்புகளை 'கூண்டுக்கிளி' என்றும், 'கோழி' என்றும் விமர்சிப்பவர்களை  அணுகுங்கள். அவர்களிடம் கருத்தைக் கேட்டு வாங்கி நீங்கள் (பொதுமக்கள்) தக்க பதிலடி கொடுங்கள்" எனக் கூறியுள்ளார்.

பா.ஜனதா பதிலடி

##~~##
இதனிடையே திக் விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத்,"சிபிஐ-யின் தார்மீக நெறி குறைந்துபோய்விட்டது என்றால், அதற்கு மத்திய அரசுதான் காரணம்.சிபிஐ-யை நியாயமான விசாரணை நடத்த அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதில்லை.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பிரதமருக்கு  தொடர்பு இருப்பதால்தான், அந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் அரசில் இடம்பெற்ற அமைச்சர் ஒருவர் திருத்தினார்.
பெரும் ஊழல் தொடர்பான வழக்குகளில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.