Published:Updated:

‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’
பிரீமியம் ஸ்டோரி
‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

தண்ணீர் லாரிகளில் கட்டுக்கட்டாய் பணம்!ஓவியங்கள்: அரஸ்

‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

தண்ணீர் லாரிகளில் கட்டுக்கட்டாய் பணம்!ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:
‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’
பிரீமியம் ஸ்டோரி
‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’
‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

தேர்தல் நேரத்தில், அடித்து விடப்படும் வாக்குறுதிகளைவிட அள்ளிவிடப்படும் ‘நோட்டுகளே’ அதிகம். தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரசியல் கட்சிகள் பணத்தை நகர்த்தும் உத்திகள் மலைக்க வைக்கின்றன.

2011 சட்டமன்றத் தேர்தல் நேரம் அது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க-வும் அரியணை ஏற அ.தி.மு.க-வும் முட்டிமோதின. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தேர்தல் செலவுகளுக்காக ஆம்புலன்ஸில் பணம் கடத்துவதாகப் புகார் எழுந்தது. ஆம்புலன்ஸ்களைத் தேர்தல் ஆணையம் சோதிக்கத் தொடங்கியவுடன், அமரர் ஊர்திகளில் பிணத்தோடு பணத்தையும் சுருட்டி அனுப்பினர்.

2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், கோடி கோடியாய் பணம் விளையாடியதை, ஒட்டுமொத்த இந்தியாவுமே கவனித்துக்கொண்டிருந்தது. டெல்டாவிலிருந்து கோயம்பேடுக்குக் காய்கனி ஏற்றிவந்த சரக்கு மினி லாரி ஒன்று, அதிகாலை நேரத்தில் சென்னை, பெரம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் சத்தமில்லாமல் நுழைந்தது.  கணநேரத்தில், காய்கனி மூட்டைக்குள் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம், சிறு சிறு பண்டல்களாக மாற்றப்பட்டு, கீழ்மட்ட நிர்வாகிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டன. அன்று மட்டும் வருமானவரித்துறை அங்கு நுழைந்திருந்தால், கதையே மாறியிருக்கும். இன்றைக்கு ஆம்புலன்ஸ், காய்கனி வண்டிகள் எல்லாம் பழங்கதையாகிவிட்டன. தேர்தல் திருவிழாவுக்காகத் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்  நவீன வழிமுறைகளில், பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

எப்படிக் கொண்டு செல்லப்படுகிறது இந்தப் பணம்? தேர்தல் செலவினப் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். “இலைக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஏற்கெனவே தொகுதிக்குள் பணத்தைக் கொண்டுசென்றுவிட்டனர். அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தியே பெரும்பாலான கரன்ஸி நோட்டுகள் பயணமாகின்றன. தேர்தல் பறக்கும் படையினர் கார், கனரக வாகனங்களை மட்டுமே சோதனையிடும் வேளையில், ஆட்டோ, தண்ணீர் லாரிகள் மூலமாகவும் பணம் கொண்டு செல்லப்படுகிறது. கோடிகளாக வைத்திருந்தால் ஆபத்து என்பதால், லட்சங்களாகப் பிரித்துப் பகுதி, வட்டச் செயலாளர் வரையில் கொடுத்து வைத்துள்ளனர். தொகுதிக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர் பொறுப்பு என்பதால், யாரிடம் பணம் எவ்வளவு உள்ளது என்கிற விவரம் அவருக்குத் தெரியும். சூரியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாடுதான் திண்டாட்டம். பணத்தைக் கொண்டுசெல்ல முடியாமல் தவிக்கின்றனர்” என்றார்.

தென்மண்டல வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பரிசுக் கட்சிக்காரர்களின் பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்கவே முடியவில்லை. உதாரணத்துக்கு, தென்மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் வங்கிகள் மூலமாகவே பணப்பட்டுவாடாவை நடத்திவருகிறார். மூன்று தெருக்களுக்குப் பத்து குழுக்கள் அமைத்து, அக்குழுவின் தலைவராகக் கட்சியிலிருந்து ஒருவரை நியமிக்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது ஐந்து வாக்காளர்களாவது இருக்க வேண்டுமாம். வெளிநாட்டில் பணிபுரியும் அந்்தக் குழுத்தலைவர்களின் உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கைப் பெற்றுக்கொள்கின்றனர். தொழில் நிமித்தமாகச் சொல்லி இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஒரு லட்ச ரூபாய் அக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதை அத்தலைவர் எடுத்துத் தனக்குக் கீழ் உள்ள குழுக்களுக்குச் செலவுசெய்ய வேண்டும். இதை எப்படிக் கண்காணிக்க முடியும்?’’ என்றார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான மார்ச் 10-ம் தேதி முதல் இன்றுவரை மட்டும் (ஏப்ரல் 1-ம் தேதி முடிய), தமிழகத்தில் மொத்தம் 80.35 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை மாவட்டம் 5.86 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. மதுரை, சேலம் தொகுதிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவைபோக, 132 கோடி ரூபாய் மதிப்பிலான 460 கிலோ தங்கமும், 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமாகக் கொண்டு வந்தால்தானே பிரச்னை என வெளிமாநிலங்களிலிருந்து தங்கமாகக் கொண்டுவரப்பட்டு, உள்ளூரிலுள்ள சில வணிகர்களிடம் பணமாக மாற்றப்படுகிறது.

‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா!’

பணப் பட்டுவாடாவைத் தடுப்பது குறித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, “கண்காணிப்புக் குழு, பறக்கும்படை வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றன. தொகுதிக்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளோம். வருமானவரித்துறை, காவல்துறை களத்தில் உள்ளன. தேர்தலுக்காகப் பணம் கொண்டுசெல்லப்படுவதாகத் தெரிந்தால், யார் வேண்டுமானாலும் தொகுதித் தேர்தல் பார்வையாளர்களுக்குத் தகவல் அளிக்கலாம்’’ என்றார்.

அதேசமயம் ஜி.பி.எஸ் பொருத்திய வாகனங்களில் பறக்கும் படையினர், அரசியல் பிரமுகர்களின் பணப் பட்டுவாடாவைக் கண்காணிப்பதை விட்டுவிட்டு,     அன்றாட வியாபாரத்துக்காகப் பணம் கொண்டுசெல்லும் வியாபாரிகளை வழிமறித்து லஞ்சம் கேட்கும் சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன. சமீபத்தில், ஆவடியைச் சேர்ந்த வியாபாரி ஜெய் குகன் என்பவரை மிரட்டி, அவருக்குச் சொந்தமான 50,000 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நான்கு அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால், கோடி கோடியாய் குவித்திருக்கும் அரசியல்வாதிகளைத் தேர்தல் ஆணையம் எதுவும் செய்வதில்லை என்கிற கோபம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது.

- ந.பொன்குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism