Election bannerElection banner
Published:Updated:

`மின்விசிறியில் தூக்குப்போட இரண்டு முறை நிர்மலா தேவி முயன்றார்!’ - வக்கீல் அதிர்ச்சி பேட்டி

`மின்விசிறியில் தூக்குப்போட இரண்டு முறை நிர்மலா தேவி முயன்றார்!’ - வக்கீல் அதிர்ச்சி பேட்டி
`மின்விசிறியில் தூக்குப்போட இரண்டு முறை நிர்மலா தேவி முயன்றார்!’ - வக்கீல் அதிர்ச்சி பேட்டி

`மின்விசிறியில் தூக்குப்போட இரண்டு முறை நிர்மலா தேவி முயன்றார்!’ - வக்கீல் அதிர்ச்சி பேட்டி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைப் பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதானார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைகழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியும் கைதாயினர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பியபோதும், அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய மாதர் சங்கத்தினர் போர்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், நிர்மலாதேவியின் வக்கீல் பசும்பொன்பாண்டியன் இன்று(28.2.2019) நமக்கு அளித்த பேட்டி, ``மதுரை சிறைச்சாலையில் என் கட்சிக்காரர் நிர்மலா தேவியை நான் சந்தித்தபோது, கண்கலங்கிய நிலையில் அவர் என்னிடம் பேசிய விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டேன். வக்கீல் என்கிற முறையில் என்னிடம் நிர்மலாதேவி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறார். ஆனால், எங்கள் இருவரைச் சுற்றிலும் சிறைத்துறை அதிகாரிகள் உட்கார்ந்தபடியே கவனிக்கிறார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. நிர்மலாதேவி, என்னுடன் இயல்பாகப் பேசமுடியாமல் போகச் செய்வதுதான் அவர்களின் நோக்கம். அப்படியிருந்தும் சில தகவல்களைப் பேசினார். `எனக்கு சிறைச்சாலையில் சித்ரவதைகள் எல்லை மீறிப்போச்சு. எப்படியாவது என்னை வெளியே அழைச்சுகிட்டுப்போயிடுங்க’ என்றார்.  கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது, அவரை மீடியாக்களுடன் பேசவிடாமல் போலீஸார் தடுத்தனர். மீடியா நண்பர்கள் போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அன்று நிர்மலா தேவியைப் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றபோது, நடந்ததைச் சொன்னார். ஓடும் வேனில் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். முதுகில் அடி விழுந்ததால், சிவந்துபோயிருந்ததை தழுதழுத்த குரலில் சொன்னார்.

சிறைச்சாலையில் குறிப்பிட்ட சிலரால், மன உளைச்சலைக் கொடுக்கும் வகையில் விதவிதமான சித்ரவதைகள் நடக்கிறதாம். இதை நான் சிறைத்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியபோது, `அவர்தான் நாடகம் ஆடுகிறார்’ என்றார்கள். வாழ்க்கையே வெறுத்த நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு முறை மின்விசிறியில் தூக்குப்போட முயன்றிருக்கிறார். அருகில் இருந்த பெண் கைதிகள் தூங்கிக்கொண்டிருந்த நேரமாம். நல்லவேளை... யாரோ கவனித்து காப்பாற்றியிருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை பெயில் போடக் கூடாது. வழக்கில் யாருடைய பெயரையும் வெளியிடக் கூடாது என்பதுதான் நிர்மலா தேவியை மிரட்டுகிறவர்கள் சொல்கிற டயலாக். என்னைப் பொறுத்தவரையில், அடுத்த ஒரு வாரத்தில் சட்டப்படி நிர்மலாதேவியை வெளியே நிச்சயமாக அழைத்து வருவேன்’’ என்கிறார். ஏன் இந்த அளவுக்குச் சித்ரவதைகள்? என்பது தமிழக மக்களுக்கே தெரிந்த விஷயம்தான். தற்போது நீதிமன்றமும் உன்னிப்பாகக் கவனிக்கிறது. அடுத்த நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 


 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு