Published:Updated:

`அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தம் இனி மாறும்!’ - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

`அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தம் இனி மாறும்!’ - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
`அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தம் இனி மாறும்!’ - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

`அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தமே விரைவில் மாறும்’ எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விமானப்படையினர் அத்துமீறி இந்திய எல்லைப்பகுயில் நுழைந்தனர். அவர்களை விரட்டச் சென்ற  விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரைக் கைது செய்தது. அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான். முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபிநந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் சற்றுத் தணிந்துள்ளது. இந்நிலையில் தாய் நாடு திரும்பியுள்ள அபிநந்தனுக்கு மோடி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``இந்தியா என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கிக்கொண்டுள்ளது. அகராதியில் உள்ள ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. அபிநந்தன் என்றால், வெல்கம் என்று அர்த்தம் இருந்தது. ஆனால், இனி அபிநந்தன் என்ற வார்த்தைக்கான அர்த்தம் மாறும்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக பிரதமர் மோடி அபிநந்தனை வரவேற்று ட்விட்டரில், ‘தாயகத்துக்கு உங்களை வரவேற்கிறேன். விங் கமாண்டர் அபிநந்தன் உங்கள் வீரத்தை நினைத்து இந்த தேசம் பெருமை கொள்கிறது. நமது ராணுவம், 130 கோடி இந்தியர்களுக்கு ஓர் முன்னுதாரணம். வந்தே மாதரம்!' என்று பதிவிட்டிருந்தார்