Published:Updated:

திருச்சி: குளிர்பானத்தில் மது; சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - வீடியோ வெளியானதால் 3 பேர் கைது

மாதிரி படம்

குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, 6 இளைஞர்கள், 16 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: குளிர்பானத்தில் மது; சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - வீடியோ வெளியானதால் 3 பேர் கைது

குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, 6 இளைஞர்கள், 16 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாதிரி படம்

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற இளைஞருடன் நட்பு உண்டாகியிருக்கிறது. அதையடுத்து கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற ரங்கநாதன், குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து முசிறி அருகே காவிரி ஆற்றங்கரையில் வைத்து சிறுமியை வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், அவரின் நண்பர்கள் ஐந்து பேரையும் வரவழைக்க, அவர்களும் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்தக் கொடுமையை வீடியோவாகவும் அவர்களுடைய செல்போனில் பதிவுசெய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால், வீடியோவை ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல எல்லாருக்கும் அனுப்பிடுவோம் என மிரட்டி சிறுமியை அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு அந்த வீடியோவைக் காட்டி அடிக்கடி மாணவியைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆறு பேரும் பாலியல் சித்ரவதை கொடுத்துவந்துள்ளனர். சிறுமியின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், 16 வயதிலேயே, அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்துவைத்துள்ளனர். சிறுமிக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்ற தகவல் வெளியே தெரியவர, திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருக்கிறது. அதையடுத்து சிறுமியை திருச்சியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

கைதான ரங்கநாதன் - கணேசன் - மணிகண்டன்
கைதான ரங்கநாதன் - கணேசன் - மணிகண்டன்

இந்த நிலையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்களுக்கிடையே ஏதோ பிரச்னை நடத்திருக்கிறது. அதில் ஒரு வாலிபர், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை நேற்று முன்தினம் வாட்ஸ்அப்பில் பரப்பியிருக்கிறார். அந்த வீடியோ வேகமாகப் பரவி கடைசியில் சிறுமியின் தந்தைக்கே சென்றிருக்கிறது. வீடியோவைப் பார்த்து பதறிப்போன சிறுமியின் தந்தை, கலங்கியபடி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஆறு இளைஞர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையில் இறங்கினர். அதையடுத்து காப்பகத்தில் உள்ள சிறுமியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ரங்கநாதன், மணிகண்டன், தர்மா (எ) கணேசன் ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் கைதுசெய்துள்ளர். மேலும், தலைமறைவாக இருக்கும் மூவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.