Published:Updated:

1981 விமான கடத்தல் வழக்கு: கடத்திச் சென்றவர் பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல்! - போலீஸ் விசாரணை

1981 விமான கடத்தல் வழக்கு ( முகநூல் )

கடந்த 2000-ம் ஆண்டு தண்டனை நிறைவடைந்த நிலையில், 5 பேரில் கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

1981 விமான கடத்தல் வழக்கு: கடத்திச் சென்றவர் பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல்! - போலீஸ் விசாரணை

கடந்த 2000-ம் ஆண்டு தண்டனை நிறைவடைந்த நிலையில், 5 பேரில் கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

Published:Updated:
1981 விமான கடத்தல் வழக்கு ( முகநூல் )

கடந்த 1981-ம் ஆண்டு, 29-ம் தேதி டில்லியிலிருந்து அமிர்தசரஸ் வழியாக சுமார் 111 பயணிகளுடன் ஸ்ரீநகருக்குச் செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், காலிஸ்தான் ஆதரவாளர்களான கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவால், பாகிஸ்தானின் லாகூருக்குக் கடத்தப்பட்டது. பாகிஸ்தான் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைதுசெய்தனர். மேலும், பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு தண்டனை நிறைவடைந்த நிலையில், 5 பேரில் கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில், இந்தியா திரும்பிய கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் ஆகியோருக்கு எதிராக தேசத்துரோகம், இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கஜிந்தர் பால் சிங்
கஜிந்தர் பால் சிங்
முகநூல்

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனிடையே, கடந்த 2011-ம் ஆண்டு அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் வெளியேவந்த கஜிந்தர் பால் சிங் காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை தேடப்படும் தீவிரவாதியாக காவல்துறை அறிவித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கஜிந்தர் பால் சிங்
கஜிந்தர் பால் சிங்
முகநூல்

மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசும் கஜிந்தர் பால் சிங் பாகிஸ்தானில் இல்லை எனத் தெளிவுபடுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது காலிஸ்தான் ஆதரவாளர் கஜிந்தர் பால் சிங் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், குருத்வாரா முன்பாகத் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறது.