Published:Updated:

முஷாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 4 பேர் பலி!

விகடன் விமர்சனக்குழு
முஷாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 4 பேர் பலி!
முஷாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 4 பேர் பலி!
முஷாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 4 பேர் பலி!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், முஷாஃபர் நகரில் மீண்டும் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம், முஷாஃபர்நகர் மாவட்டம், கவால் கிராமத்தில் இரு பிரிவினரிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 48 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.

##~~##
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் முஷாஃபர் நகர் மாவட்டம், முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
முகமத்புரைசிங் கிராமத்திற்குள் புகுந்து ஹூசைன்பூர் கிராமத்தினர் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய வதந்தியால் இந்த கலவரம் ஏற்பட்டதாகவும், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.