Published:Updated:

நாடாளுமன்ற தாக்குதல்: 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தாக்குதல்: 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!
நாடாளுமன்ற தாக்குதல்: 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதலின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மலரஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற தாக்குதல்: 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டதன் 12வது நினைவு தினம் இன்று நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது.

##~~##
இந்த தாக்குதலின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படையினர் 12 பேருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.