Published:Updated:

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

புதுடெல்லி: மாநிலங்களவையில் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில் மாநிலங்களவையில் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, ''மாநில அரசுகளின் அதிகாரத்தில், மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடக் கூடாது. எனவே, வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது'' என்றார்.

##~~##
தி.மு.க. எம்.பி. செல்வகணபதி பேசும்போது, ''வகுப்புவாத மசோதாவில் உள்ள அம்சங்களை தி.மு.க. எதிர்க்கிறது. சட்டம்-ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கூடாது'' என்றார்.
இதேபோல், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசும்போது, ''கூட்டாட்சி முறையை பாதிக்கும் மசோதாவை தாக்கல் செய்யவில்லை. வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை மிக கவனமாக வடிவமைத்துள்ளோம்'' என்றார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக  வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை விவாதத்திலிருந்து தள்ளி வைப்பதாக அப்போது அவையை நடத்திய பி.ஜே. குரியன் அறிவித்தார்.