Published:Updated:

நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி!

Vikatan Correspondent
நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி!
நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி!
நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி!

தந்தேவாடா: சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கு இடையே நடந்த சண்டையில் 7 போலீசார்  பலியாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் உள் ஷியாம்கிரி வனப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரை நோக்கி நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 7  போலீசார் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் போலீசாரிடமிருந்த ஆயுதங்களையும் நக்சலைட்டுகள் பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.