Published:Updated:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 12 பேர் பலி!

Vikatan Correspondent
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 12 பேர் பலி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 12 பேர் பலி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 12 பேர் பலி!

பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய இரு வெவ்வேறு தாக்குதலில் 5 தேர்தல் பணியாளர்கள் உட்பட 12 பேர் பலியானார்கள்.

தேர்தல் அதிகாரிகள் 5 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்றின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், அதில் பயணம் செய்த தேர்தல் அதிகாரிகள் 5 பேர் மற்றும் அந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் உதவியாளரும் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

அதேப்போன்று பஸ்தார் என்ற இடத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.