Published:Updated:

கோடா: கோச்சிங் நகரமா... தற்கொலை நகரமா? - போட்டித் தேர்வுக்குத் தயாரான 3 மாணவர்கள் தற்கொலை

தற்கொலை செய்த மாணவரை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது...

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் போட்டித் தேர்வுக்கு தயாராகிவந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

கோடா: கோச்சிங் நகரமா... தற்கொலை நகரமா? - போட்டித் தேர்வுக்குத் தயாரான 3 மாணவர்கள் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் போட்டித் தேர்வுக்கு தயாராகிவந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

Published:Updated:
தற்கொலை செய்த மாணவரை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது...

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் இருக்கின்றன. இங்கு ஐஐடி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் இந்தியா முழுவதுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக, கடந்த சில காலமாகவே குற்றம்சாட்டப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள்தான் நீட் போன்ற போட்டித் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் 11 மற்றும் 12-வது வகுப்பு படிப்பையும் படித்துக்கொண்டே போட்டித்தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திவருகின்றனர். அவ்வாறு கோடாவில் விடுதியில் தங்கிப் படித்துவந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோடா: கோச்சிங் நகரமா... தற்கொலை நகரமா? - போட்டித் தேர்வுக்குத் தயாரான 3 மாணவர்கள் தற்கொலை

அவர்களில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட அங்குஷ், உஜ்வல் ஆகியோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே விடுதியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தனர். அவர்கள் 11-வது வகுப்பு படித்துவந்தனர். அவர்கள் இருவரும் நண்பர்களா என்று தெரியவில்லை. இதில் ஒருவர் இன்ஜினீயரிங்குக்கும், மற்றொருவர் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கும் தயாராகிவந்தனர். இரண்டு பேரும் மூன்று ஆண்டுகளாக கோடாவில் தங்கிப் படித்துவருகின்றனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரனவ் என்ற மற்றொரு மாணவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இவர் நீட் நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிவந்தார். இந்தத் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். மாணவர்கள், தற்கொலைக்கான காரணம் குறித்துக் கடிதம் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை. அதிகப்படியான நேரம் பாடம் நடத்தப்படுவதாலும், அதிகமான அசைன்மென்ட் கொடுக்கப்படுவதாலும், அடிக்கடி இன்டர்னல் தேர்வு நடத்துவது போன்றவற்றாலும் மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிவருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

மன அழுத்தம்
மன அழுத்தம்

கடந்த மாத இறுதியில் கோடாவில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 2018-ம் ஆண்டில் மட்டும் கோடாவில் 18 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு 7 பேரும், 2016-ம் ஆண்டு 17 பேரும் தற்கொலை செய்திருக்கின்றனர். 2016-ம் ஆண்டு அனைத்து கோச்சிங் கிளாஸ்களையும் மூட வேண்டும் என்று சத்தம் போட்டு கத்திவிட்டு மாணவி ஒருவர் கோச்சிங் கிளாஸ் கட்டடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இந்த கோச்சிங் கிளாஸ்களை ஒழுங்குபடுத்த சட்ட மசோதா உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்!