Published:Updated:

எல்லையில் மீண்டும் பாக். ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

எல்லையில் மீண்டும் பாக். ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!
எல்லையில் மீண்டும் பாக். ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!
எல்லையில் மீண்டும் பாக். ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

காஷ்மீர்: இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்கனவே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 1ஆம் தேதியில் இருந்து இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 10 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்ததோடு, பல வீடுகளும் சேதம் அடைந்தன.

கடந்த 3ஆம் தேதி காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 4 முறை தாக்குதல் நடத்தியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்றும் (5ஆம் தேதி) பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டம், பால்னோய் சப்-செக்டார் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது கடும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்துள்ளனர்.

இந்த தகவலை இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் மணிஷ் மெக்தா தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.