Published:Updated:

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

விகடன் விமர்சனக்குழு
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு:  இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில், இந்திய  எல்லையோரத்தில்  இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வந்தது.

இதனால், எல்லையோரத்தில் உள்ள 113  கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,  பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 1 ஆம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 13 பாதுகாப்பு படையினர் உள்பட 94 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததையடுத்து, சில நாட்களாக தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த    பாகிஸ்தான், கடந்த இரு நாட்களாக  மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சவுஜியான் பகுதியில் இன்று காலையில் இருந்து துப்பாக்கியால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை ஏவியும் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் கொடுத்துக் கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் மோதல் நடைபெற்று வருவதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.